தினமும் “இஞ்சி சாறு” குடித்தால் மருத்துவரிடம் செல்ல அவசியம் இருக்காது!!

Photo of author

By Divya

தினமும் “இஞ்சி சாறு” குடித்தால் மருத்துவரிடம் செல்ல அவசியம் இருக்காது!!

நம் உணவில் இஞ்சியின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.இந்த இஞ்சி அதிக நறுமணத்துடன் இருப்பதினால் உணவில் சேர்க்கப்படும் பொழுது அவை மிகவும் சுவையாக இருக்கிறது.இஞ்சியில் தேநீர்,துவையல்,ஊறுகாய்,பச்சடி,தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.

இஞ்சியில் அதிகளவு பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின் சி,பி6,நியாசின்,போல்ட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.அதேபோல் புரதங்கள்,தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருப்பதினால் இவை நம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்க க்கூடியவையாக இருக்கிறது.

தினமும் இஞ்சி சாறு அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-

*இஞ்சி செரிமானத்திற்கு உகந்த ஒரு பொருள்.இந்த இஞ்சியின் சாற்றுடன் எலுமிச்சை சாறு + தேன் கலந்து சாப்பிட்டால் செரிமான பாதிப்பு நீங்கும்.

*அதேபோல் சளி தொல்லை இருபவர்கள் இஞ்சி சாற்றுடன் லுமிச்சை சாறு + தேன் கலந்து சாப்பிட்டால் விரைவில் அந்த பாதிப்பு சரியாகும்.

*இஞ்சியில் அதிகப்படியான ஆண்டிபயாட்டிக் இருக்கிறது.இவை உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

*உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுவதில் இஞ்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த இஞ்சியில் டீ அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும்.

*உடல் வலி,அசதி இருப்பவர்கள் இஞ்சியில் ஜூஸ் செய்து பருகி வருவது மிகவும் நல்லது.

*இஞ்சியில் ஜின்ஜெரால்கள் மற்றும் பாராடோல்கள் இருக்கிறது.இவற்றை ஜூஸ் செய்து அருந்தி வருவதன் மூலம் உடலில்  புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க முடியும்.

இஞ்சியை யார் யார் தவிர்க்க வேண்டும்?

*கர்ப்பிணி பெண்கள் இஞ்சியை சாப்பிட கூடாது.காரணம் இஞ்சியில் செரிமானத்திற்கு தேவையான அதிகமாக சத்துக்கள் இருப்பதால் வயிறு சுருக்கம் மற்றும் குறை பிரசவம் போனவற்றைக்கு இந்த இஞ்சி வழிவகுத்து விடும்.

*அதேபோல் பித்தப்பை கல் இருப்பவர்கள் இந்த இஞ்சி பயன்பாட்டை தவிர்க்கவும்.
பித்தப்பை கல்:

*அல்சர் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள் இஞ்சி பயன்பாட்டை தவிர்த்து கொள்ளவும்.

*அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் இஞ்சி சாறு அருந்துவதை முற்றலும் தவிர்க்கவும்.

*உடல் எடை குறைவாக இருப்பவர்கள் இஞ்சி சாறு அருந்துவதை தவிர்க்கவும்.