மூட்டு வலியை நிமிடத்தில் சரி செய்யும் அற்புத தைலம் – வீட்டு முறையில் தயார் செய்வது எப்படி?

0
33
#image_title

மூட்டு வலியை நிமிடத்தில் சரி செய்யும் அற்புத தைலம் – வீட்டு முறையில் தயார் செய்வது எப்படி?

இன்றைய காலத்தில் அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறோம்.மூடுக்கு உரிய வலு இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுதல்,எலும்பு தேய்மானம் ஆகுதல் உள்ளிட்டவைகளும் மூட்டு வலி மற்றும் மணிக்கட்டு வலிக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*விரலி இலை – 1 கைப்பிடி அளவு

*நல்லெண்ணெய் – 250 கிராம்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் ஒரு கைபிடி அளவு விரலி இலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றி உலர்திக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை நன்கு சூடேறி வந்ததும் உலர்த்தி வைத்துள்ள விரலி இலைகளை போட்டு மிதமான தீயில் பொரிய விடவும்.

நல்லெண்ணெய் பழுப்பு நிறத்திற்கு மாறத் தொடங்கும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.காய்ச்சி வைத்துள்ள எண்ணெயை ஒரு நாள் முழுவதும் நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.

பிறகு இரவு தூங்குவதற்கு முன் மூட்டுகளை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி கொள்ளவும்.பின்னர் ஒரு காட்டன் துணி வைத்து துடைத்துக் கொள்ளவும்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள மூலிகை எண்ணெய் தேவையான அளவு எடுத்து மூட்டுகளின் போட்டு நன்கு தேய்த்துக் கொள்ளவும்.குறைந்தது 5 நிமிடம் மூட்டுகளை மஜாஜ் செய்யவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர தீராத முழங்கால் மூட்டு வலி சில நாட்களில் குணமாகிவிடும்.