இந்த உணவுகளை சாப்பிட்டால் முட்டைக்கு இணையான சத்துக்கள் கிடைக்கும்!!

0
38
#image_title

இந்த உணவுகளை சாப்பிட்டால் முட்டைக்கு இணையான சத்துக்கள் கிடைக்கும்!!

புரதசத்து நம் உடலுக்கு அவசியமான ஒன்றாகும்.இவை உடலில் தசை வளர்ச்சி,எலும்பு வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்கு பெரிதும் உதவுகிறது.இந்த புரதம் அசைவ உணவுகளான மீன்,முட்டை உள்ளிட்டவைகளில் அதிகம் இருக்கிறது.அசைவம் சாப்பிட்டால் மட்டும் தான் இந்த புரதம் நமக்கு கிடைக்கும் என்று இல்லை.சைவ உணவுகளிலும் அசைவத்திற்கு இணையான சதுக்கள் நிறைந்து இருக்கிறது.

அசைவைத்திற்கு இணையான புரத சத்துக்களை கொண்டுள்ள காய்கறி வகைகள்:-

*முட்டைக்கு இணையான சத்துக்கள் பச்சை பட்டாணியில் அதிக அளவில் உள்ளது.பச்சை பட்டாணியில் அதிகளவு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.அதேபோல் பாஸ்பரஸ், போலேட்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம், இரும்பு,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது.இவை வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது.

*நம் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட் கார்னில் முட்டைக்கு இணையான புரதச்சத்து நிறைந்து இருக்கிறது.அதேபோல் மெக்னீசியம்,தியாமின்,வைட்டமின் சி,B6 மற்றும் பாஸ்பரஸ் போன்ற அதிகளவில் அடங்கியுள்ளது.

*நாம் அதிகம் உண்ண வேண்டிய உணவு வகைகளில் ஒன்று கீரை.இதில் அதிகளவில் புரதம்,வைட்டமின் ஏ,கே,சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.கீரையை அதிகளவில் உட்கொண்டு வருவதன் மூலம் இரத்த ஓட்டம்,கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் சீராகும்.

*அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ள மற்றொரு காய்கறி காலிஃபிளவர்.இதில் புரதம் தவிர்த்து அதிகளவு கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,பாஸ்பரஸ்,வைட்டமின்கள் C,K மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்டவை நிறைந்து இருக்கிறது.இவற்றை உண்பதினால் உடலுக்கு தேவையான அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.

*முட்டைக்கு இணையான புரத சத்துக்களை கொண்டுள்ள மற்றொரு காய்கறி ப்ரோக்கோலி.
இந்த காய்கறி பார்ப்பதற்கு காலிஃபிளவர் தோற்றத்தை கொன்றிருக்கும்.ப்ரோக்கோலி உடல் எடையை கட்டுக்குள் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.