தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

0
319
#image_title

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அடுத்து ஓமிகிரான் வைரஸ் சீனாவில் பரவியதாக செய்தி கிளம்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தற்போது 64 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பாதிக்கப்பட்ட இந்த 64 பேரில் 48 ஆண்களும் 16 பெண்களும் அடங்குவர்.

அதிகபட்சமாக கோவையில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 13 பேருக்கும், வெளிநாட்டு பயணிகள் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 15 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற 23 மாவட்டங்களில் எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. அதேபோல் போன பரவலின் போது ஏற்பட்ட உயிரிழப்பை போல இந்த முறை அதிக உயிரிழப்பும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் எந்த உயிரிழப்பும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.