#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

0
323

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சென்னையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ஆடை வடிவமைப்பாளராக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது தற்கொலைச் சம்பவம் தொடர்பாக சென்னை அரும்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பாடலாசிரியர் கபிலன்:

 

கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். நடிகர் கம்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் கபிலன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தும் இருக்கிறார். கபிலன் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கபிலன் மகள் தூரிகை:

 

கபிலனின் மகள் தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வந்தார். இவர் பல்வேறு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவர் ‘Being Women Magazine’ எனும் இதழையும், ‘The Label Keera’ எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் சற்று முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#Breaking: திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை

இதனையடுத்து திரையுலகை சேர்ந்தவர்கள் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்

 

 

Previous articleகுரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு
Next articleவிடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here