Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் கோழி பிரியாணி – சுவையாக செய்வது எப்படி?

0
29
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் கோழி பிரியாணி – சுவையாக செய்வது எப்படி?

கேரளா மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சி வகைகளில் ஒன்று சிக்கன், இவை அதிக ருசி தரக் கூடிய நான் – வெஜ் ஆகும். இந்த கோழியில் வறுவல், ப்ரை, சில்லி, குழம்பு, கிரேவி உள்ளிட்டவைகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அனைவருக்கும் விருப்ப உணவான பிரியாணியை கேரளா ஸ்டைலில் செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கோழி இறைச்சி  – 1 கிலோ

*பஸ்மதி அரிசி – 1 கிலோ

*பட்டை – 1 துண்டு

*இலவங்கம் – 4

*சோம்பு – 1தேக்கரண்டி

*ஏலக்காய் – 2

*பச்சை மிளகாய் – 12

*மிளகு – 1/2 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 10

*இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

*கொத்துமல்லி இலை – சிறிதளவு

*புதினா – சிறிதளவு

*தயிர் – 150 மில்லி

*தக்காளி – 150 கிராம்

*வெங்காயம் – 1 கிலோ

*இலவங்கப்பட்டை – 2 துண்டுகள்

*பிரியாணி இலை – 2

*முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை – 50 கிராம்

*ஏலக்காய் – 5

*நெய் – 200 கிராம்

*கொத்தமல்லித்தூள் – 2 தேக்கரண்டி

*பால் – 500 மில்லி

*குங்குமப்பூ – 1 சிட்டிகை

செய்முறை:-

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் பச்சை மிளகாய், பட்டை, இலவங்கம், சோம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துப் நன்கு வதக்கவும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி விடவும்.

இந்த கேப்பில் 1 கிலோ பாசுமதி அரசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் அரசி ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி விடவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் ஒரு பெரிய வாணலி வைத்து சிறிதளவு நெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் மசாலாக்கள், வெட்டிய வெங்காயம், புதினா, கொத்துமல்லி தழை, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, பிரியாணி இலை உள்ளிட்டவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் தண்ணீரில் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு மிதமான தீயில் 1 கிளறு கிளறவும். அடுத்து இந்த வாணலியை ஒரு தட்டு கொண்டு மூடி 15 நிமிடங்கள் அரிசி கலவையை வேக விடவும்.

பின்னர் ஏற்கனவே வெந்து கொண்டிருக்கும் சிக்கன் அடுப்பை அணைத்து விடவும். அடுத்து அரசி கலவை கொதித்து கொண்டிருக்கும் வாணலியில் வேக வைத்துள்ள சிக்கன் கலவையை சேர்த்துக் கொள்வும். அதோடு குங்குமப் பூ சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் வாணலியை மீண்டும் ஒரு தட்டு போட்டு மூடி விடவும். அடுத்து மற்றொரு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் சில முந்திரி மற்றும் உலர் திராட்சை மற்றும் சிறிதளவு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்கவும்.

இதை வெந்து கொண்டிருக்கும் சிக்கன் பிரியாணியில் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். இவ்வாறு செய்தால் கோழி பிரியாணி சுவையாக இருக்கும்.