தெரிந்து கொள்ளுங்கள்.. ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!

*மயக்கம் வந்த நபரை முதலில் காற்றோட்டமான இடத்திற்கு தூக்கி செல்வது அவசியம். அடுத்து மயக்கம் வந்த நபர் அணிந்த ஆடைகள் அதிக டைட்டாக இருந்தால் கொஞ்சம் தளர்வாக செய்ய வேண்டும். மயக்கம் அடைந்த நபர் ஆணாக இருக்கும் பட்சத்தில் சட்டை பட்டனை கழட்டி காற்றோட்டத்தை ஏற்படுத்தலாம்.

*மயக்க மடைந்த நபரை எப்படி அமர்த்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதன்படி அவரை உட்கார வைக்கலாம், படுக்க வைக்கலாம், பாதங்கள் மேல் நோக்கி இருக்கும்படி செய்யலாம்.

*மயக்கம் வந்த ஒருவரை படுக்க வைக்கும் பொழுது அவரது தலைக்கு தலையணை வைப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் காலுக்கு தலையணை வைக்கலாம்.

*பொதுவாக மயக்கம் வந்த நபரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது வழக்கம். இவ்வாறு செய்வது நல்லது. காரணம் முகத்தில் பளிச்சென்று தண்ணீர் தெளிப்பதால் மூளையில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு மூளை நரம்புகள் வேலை செய்து மயக்கம் தெளியத் தொடங்கும்.

*இவ்வாறு செய்து மயக்கம் தெளிந்த நபர் சோர்வாக இருப்பார். அவருக்கு தேவையான எனர்ஜி கிடைக்க வேண்டியது அவசியம். எனவே 1 கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு குளுக்கோஸ் மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து அவருக்கு குடிக்க கொடுக்கலாம்.

*ஒருவேளை இந்த உதவிகளை செய்து மயக்கம் தெளியவில்லை என்றால் மயக்கமடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது முக்கியம்.