Friday, September 20, 2024
Home Blog Page 4893

அப்போலோ மருத்துவமனையில் இராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்!

0

அப்போலோ மருத்துவமனையில் இராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்!

பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்களின் உடல் நிலை பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார், அவருடன் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்ளிட்டோரும் நலம் விசாரித்தனர். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்வு நடந்தது.

மேலும் இதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் எம்.பி பாரதி மோகனையும் நேரில் பார்த்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி.

வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கூட்டாக முதலமைச்சரை சந்தித்தனர்! முக்கிய வேண்டுகோள் விடுத்தனர்

0

வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கூட்டாக முதலமைச்சரை சந்தித்தனர்! முக்கிய வேண்டுகோளை விடுத்தனர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சிக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் திரு.இராமசாமி படையாச்சியின் உருவச் சிலையை வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.

கடலூர் மஞ்சகுப்பத்தில் நடைபெறவுள்ள இராமசாமி படையாட்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு, தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்களாக சீ.வி.சண்முகம், MC சம்பத், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், இரா.துரைகண்ணு ஆகியோர்கள் கூட்டாக சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு

0

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது

அதே போல் சற்றுமுன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபருக்கு அனுப்பியுள்ளதாகவும் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவர்களும் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் இலங்கையில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமாவிற்கான காரணங்களை தெரிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இலங்கையில் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் அதிபருமான மஹிந்தா ராஜபக்சே பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

காயத்ரி ரகுராம் ஒரு பெண் சிங்கம்: பாஜக பிரபலம் பாராட்டு

0

காயத்ரி ரகுராம் ஒரு பெண் சிங்கம்: பாஜக பிரபலம் பாராட்டு

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தனது கருத்திற்கு விளக்கம் அளித்து, வருத்தமும் தெரிவித்தார்

இதனை அடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால் திடீரென நடிகை காயத்ரி ரகுராம், திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். இந்த பதிவுகளுக்கு விடுதலைகள் சிறுத்தைகள் தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காயத்ரி ரகுராமன் டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டது

இந்த நிலையில் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் அவர்கள் காயத்ரி ரகுராம் குறித்து கருத்து தெரிவித்த போது ’நடிகை காயத்ரி ரகுராம் அவர்களுக்கு ஒரு சல்யூட். இந்து மதத்தை இருப்பவர்களுக்கு இது போன்று பெண் சிங்கங்கள் சாட்டையடி கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார் எஸ்.ஆர்.சேகரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்!

0

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்!

இந்திய பங்கு சந்தை இதுவரை செல்லாத புதிய உச்சத்தை இன்று அடைந்தது. இதில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து 40,816 புள்ளிகள் என்ற இதுவரை செல்லாத புதிய உச்சத்தை தொட்டது. அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து 12,086 என்ற நிலையில் வர்த்தகமானது. இதனையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது. 

உலக அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சி, அமெரிக்கா – சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு இடையே, ஆசிய பங்குச் சந்தைகளை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதன் கிழமை வர்த்தக நேர துவங்கியதும் உயரத் தொடங்கின.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து இதுவரை செல்லாத புதிய உச்சத்தை எட்டி வர்த்தகமானது.இதனையடுத்து தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 80 புள்ளிகள் வரை அதிகரித்து 12 ஆயிரம் புள்ளிகளை கடந்து இன்று வர்த்தகமானது. மேலும் நிஃப்டியின் துறை சார்ந்த குறியீடுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கான குறியீடு இன்று அதிக லாபத்தை ஈட்டியுள்ளது.

இன்றைய பங்குச் சந்தை வியாபாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை 1571 ரூபாயைத் தொட்டது. இந்த விலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிக அதிகமாகும். இதன் மூலமாக 633 கோடி பங்குகளின் மொத்த விலையின் மூலம் அதன் பங்கு மூலதனம் 9.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

இதன் எதிரொலியாகவும் இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏறு முகமாக அமைந்தது. இதன் மூலமாக பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 300 புள்ளிகள் அதிகரித்து 40,816 புள்ளிகளை கடந்தது. இதன் மூலமாக கடந்த காலங்களில் அடைந்த 40790 என்ற முந்தைய சாதனையை முறிடியத்தது.

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர்

0

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனியாக அரசியலில் களம் புகுந்தாலே திராவிட கட்சிகளின் கூட்டணி ஆட்டம் காணும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது கமல்ஹாசனுடன் அவர் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் கமல், ரஜினி கூட்டணி மகுறித்து பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் இந்தக் கூட்டணி குறித்து கூறிய போது ’அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் கூட்டணி எல்லாம் தூள் தூளாகும் என்றும், ரஜினி கமல் விஜய் அனைவரும் மாயம் பிம்பங்கள் என்றும் தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நடிகர் அஜித் கண்ணியமானவர் என்றும் தொழில் பக்தி மிக்கவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்

இதேபோல் ரஜினி கமல் கூட்டணி குறித்து அமைச்சர் உதயகுமார் கூறியபோது, முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை நான் வரும் என்றும், யார் முட்டை என்று நான் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உதயகுமார் ஆகியவர்கள் ரஜினி கமல் இணைப்பை கிண்டல் செய்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு

0

இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது என்னவென்றால்,

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவரை 29-ஆம் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்றைய ராணுவ ஆலோசகராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என அவர் மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் செய்த போர் குற்றங்களை விசாரிப்பதற்காக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி அதை அன்றைய இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டேன் என்று தேர்தல் பரப்புரையில் கோத்தபய தெரிவித்திருந்தார். இன்று அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவசர அவசரமாக இந்திய அரசு கோத்தபாயவுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளது. இது ஈழத்தமிழர்களை மட்டுமன்றி இன்றைய தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐநா தீர்மானத்துக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல. போர்க்குற்ற விசாரணையை நடத்த மாட்டேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கோத்தபய ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது வெளிப்படை ஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே அரணாக இருக்கின்ற இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சிங்கள பேரினவாதத்திற்குத் துணைபோவது ஒட்டுமொத்த தமிழர்களையும் வருத்தம் அடைய வைத்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபய ராஜபக்சவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமென்றும், கோத்தபாயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டுமென்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை!

0

கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும், இருவரும் கொள்கை அடிப்படையில் முற்றிலும் வேறுபாடானவர்கள். ரஜினி ஆன்மீக அரசியலை முன்வைக்கும் நிலையில், கமல் பகுத்தறிவு அரசியலை முன்வைத்து அரசியல் செய்து வருவதால் இருவரும் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள். இருப்பினும் அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்க்க இரண்டு பேரும் இணைய வேண்டும் என்று இரு தரப்புக்கும் நெருக்கமானவர் கூறிய காரணத்தால், தற்போது இருவரும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது

கமல் மற்றும் ரஜினி இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும், முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பாசிட்டிவான கருத்துக்கள் பகிரப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைவது போல் மக்கள் நீதி மையத்தின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான நடிகை ஸ்ரீபிரியா கமல் மற்றும் ரஜினி ஒருவேளை இணைந்தால் கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர் என்பது என்னுடைய கருத்து என்று ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்து இரு தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

முதலில் இரு தரப்பினரும் இணைந்து, தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தான் ஆட்சி அமைப்பது குறித்தும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பேச வேண்டும் என்றும், இணைப்பு நடக்கும் முன்னரே முதல்வர் வேட்பாளர் குறித்து பேசி இணைப்புக்கு இடைஞ்சலாக ஸ்ரீபிரியா இருப்பதாகவும் இரு தரப்பில் உள்ள அனுதாபிகள் கூறிவருகின்றனர்

ஏற்கனவே ஸ்ரீபிரியாவை கமல்ஹாசன் தனது கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசனை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீபிரியா இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.

நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம்

0

நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம்

நாகப்பட்டிணம் மாவட்டம் வாழ்மங்கலத்தை சேர்ந்த கண்ணன்-உமாமகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. 12ம் வகுப்பு படித்து வரை படித்துள்ளார். ஜனனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஜனனியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதனை காதலர் ராஜ்குமாருக்கு தெரிவித்தார் ஜனனி, சுதாரித்து கொண்ட
ராஜ்குமார், ஜனனியை அழைத்துச் சென்று தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருக்கிறார். பின்பு ராஜ்குமார் மீது மகளைக் கடத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர் ஜனனியின் பெற்றோர். பின்னர் காவல்துறையினர் ஜனனிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் ஜனனியின் பெற்றோர்கள் அவமான அடைந்ததால் கடுமையாக மனஅழுத்தத்திற்கு உள்ளாகினர். இந்த சூழ்நிலையில் நேற்றிரவு இந்த விவகாரம் தொடர்பாக ஜனனிக்கும் தாய் உமா மகேஸ்வரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தில் ஜனனியை வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து அவர் மேல் ஊற்றி தீ வைத்தார். சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடிக்க இறந்தார். இந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் தாய் உமாமகேஸ்வரியும் கொளுத்திக் கொண்டார். இவரும் கவலைக்கிடமான நிலையில் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தனது மகன் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலேயே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ராஜ்குமாரின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார். என்ன தான் இருந்தாலும் இந்த நிகழ்வை ஆணவக் கொலையாக சித்தரித்து பெரிதுபடுத்த,. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசியல் செய்ய தயாராகி வருகின்றனர்.

முரசொலி அலுவலக மூலப் பத்திரமே வராத நிலையில்! வேறு ஒரு மூலப் பத்திரக் கதை!

0

முரசொலி அலுவலக மூலப் பத்திரமே வராத நிலையில்! வேறு ஒரு மூலப் பத்திரக் கதை!

திமுக கட்சி நாளிதழான முரசொலி அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலமா? தனிபட்ட ஒருவருக்கு சொந்தமான நிலமா? என்ற தமிழக மக்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையிலான முகநூல் பதிவு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த பதிவில் தருமபுரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்க பொதுமக்கள் போராடும் நிலையில், முறையான ஆதாரங்கள் இருந்தும் தருமபுரி மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் இதைக் கண்டுக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது அந்த தனிபட்ட நபருடைய பிரச்சனையாக இருந்தாலும் தற்போது வைத்திருக்கும் பட்டா எந்த அளவிற்கு உண்மையானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது அவரின் பதிவு.மேலும் சாதாரண மக்களிடம் அரசு அதிகாரிகள் எந்த அளவிற்கு அக்கரையில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்றும் இது உணர்த்துகிறது.

தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் மனுதாரர் சி.தங்கவேல் த/பெ சின்னசாமி என்பவருக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் பகிர்ந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.

நான் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவன். 2014 ல் எங்கள் வீட்டுக்கு செல்லும் பாதை தடுக்கப்பட்டது. ஊர் பெரியவர்களை வைத்து கேட்டதற்க்கு இது எங்கள் நிலம் இனி இதன் வழி யாருக்கும் வண்டி வாகன வழி இல்லை என்றார்கள்.
இல்லை இது பல தலைமுறையாக மக்கள் பயன்படுத்தி வரும் வழிதான்? இதில் ஓடையும் போகுது எப்படி பட்டா வந்தது? என நாங்கள் கேட்க அவர்கள் 1988 லியே அந்த நிலம் தங்கள் பெயரில் மாறிய பத்திரத்தை காட்டினார்கள்.

நாங்கள் பதறிப்போனோம், இது உண்மையெனில் எங்கள் பகுதியை சேர்ந்து 20 குடும்பங்களுக்கும், எங்கள் விவசாய நிலங்களுக்கும் செல்ல வழியே இல்லை என்ற நிலை உருவாகும்.

சரி என பாதைக்கான விலையை அனைவரும் இணைந்து கொடுத்துவிட்டு போகிறோம், வழி கொடுங்கள் என்றோம் , எதிர்த்தரப்பு ஏற்கவில்லை. மாறாக பாதையில் குழி வெட்டியது, முள்ளையும்,கல்லையும் போட்டு தடுத்தும் விட்டார்கள்.

பிறகு ஒரு நாள் இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பெரியவர்கள் அந்த நிலம் மேய்ச்சல் நிலம்பா, கவர்மெண்ட் நிலம் . நாங்களே ஆடு மாடு ஓட்டிட்டு வந்தவங்க தான். இடத்திற்கு இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலை பேப்பர் மாத்திட்டு இருக்காங்க என்று சொன்னார் .

நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்தோம். அந்த நிலம் 1970 மார்ச் மாதத்தில் பிராமணர் ஒருவரின் குடும்பத்திற்கு பாகப்பிரிவினை பாத்திரத்தில் சொந்தமாகி இருந்தது. அதன் பழைய
அ- பதிவேட்டை கேட்டு மீண்டும் மனு செய்திருந்தேன் , அதில் அந்த நிலம் 1970 வரை மந்தைவெளி ஆக இருந்தது என்று பதில் வந்தது ஆவணங்களையும் இணைத்து அனுப்பினார்கள்.

பிறகு தான் தெரிந்தது அந்த நிலம் அந்தக் குறிப்பிட்ட பிராமணர் குடும்பத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத அரசு மந்தைவெளி புறம்போக்கு நிலம் என்பதும், சுற்றியுள்ள அனைத்து நிலமும் அவர்கள் குடும்ப சொத்து என்பதால் அரசு நிலத்தையும் பாகப்பிரிவினை பத்திரத்தில் அவர்களுடையது என தவறுதலாக காட்டி இவர்கள் அதை முறைகேடான வழியில் தங்கள் பெயருக்கு மாற்றி இருக்கிறார்கள் என்பதும் உறுதியானது.

அந்த போலியான பத்திரத்தை வைத்து அந்த பிராமனரின் வாரிசு தற்போது பாதையை தடுக்கும் எதிர்தரப்பினருக்கு வருவதை வாங்கிக்கொண்டு நிலத்தை எழுதியிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அதன் வழி ஏரிக்கு நீர் செல்லும் ஓடை இன்றுவரை FMB ல் உள்ளது. அதையாவது விட சொல்லி கேட்டால் அதையும் சேர்த்தே பட்டா வாங்கிவிட்டோம் என்கிறது எதிர்தரப்பு.

பிறகு மீண்டும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அந்த குறிப்பிட்ட நிலம் மந்தைவெளி புறம்போக்கு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கான செயல் முறைகள் ஏதாவது அரசால் பிறப்பிக்கப்பட்டதா? என்று கேட்டேன் அதற்கும் அவ்வாறான ஆணைகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பதில் வந்தது.

அடுத்ததாக மந்தைவெளி நிலம் தனி நபரின் பெயரில் (கிட்டத்தட்ட 1 ஏக்கர்) பட்டா வழங்க அரசுக்கு உரிமை உள்ளதா என RTI மூலம் கோரி இருந்தோம். அதற்கும் அவ்வாறு பட்டா வழங்க அரசு விதிகளில் இடமில்லை என பதில் கிடைத்தது.

இத்தனை ஆதாரங்களையும் வைத்துக்கொண்டு அரசுக்கு இந்த நிலத்தின் பட்டாவை ரத்து செய்யவேண்டும் என 2017 ல் மனு செய்திருக்கிறோம் .

6 கிராம நிர்வாக அலுவலர் ,
4 வருவாய் ஆய்வாளர்,
6 வட்டாட்சியர்,
3 கோட்டாட்சியர்
3 மாவட்ட வருவாய் அலுவலர் என மாறிவிட்டார்கள்…

அனைத்து தரப்பும் விசாரணைக்கு அழைத்து விட்டது நாங்கள் சென்று எங்களிடம் உள்ள ஆவணங்களை காட்டினோம் . ஆனால் யாரும் முடிவு எடுக்காமல் எதிர்பார்ப்பை சமாதனம் செய்து வழி விட்டு விடுங்கள் இங்கேயே பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் என சமாதானம் பேசி பார்த்தது, எதிர்தரப்பு எதற்கும் பதில் தராமல் வழக்கறிஞர் கொடுத்த துண்டு சீட்டை கொடுத்து விட்டு போனது. இப்பொழுதும் இந்த மனு எந்த முடிவும் எடுக்கப்படாமல் மாவட்ட வருவாய் அலுவலர் மேஜையில் தூங்குகிறது.

கடைசியாக வட்டாட்சியர் இந்த பாகப்பிரிவினை பத்திரத்தையெல்லாம் ஆதாரமாக ஏற்க முடியாது, இது அரசு நிலம் என்பதற்கு ஆதாரம் கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் இது உங்கள் பூர்வீக சொத்து என்பதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என மேற்குறிப்பிட்ட பிரமணர் குடும்ப வாரிசிடம் கேட்க அவர் அப்படி எதுவும் இல்லை என கைவிரித்துவிட்டார்.

இப்ப ட்விஸ்ட் என்னன்னா,
அந்த நிலத்தை நான் அபகரிக்க முயன்றதாகவும், அவர்கள் வீட்டு வயதான பெண்களை தாக்கி கொல்லப் பார்த்ததாகவும் என் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. சரி வழக்கை அவர்கள் தொடுத்திருப்பதும் நல்லது தான் அங்கே போய் அது பொய், நிலமே அவர்களுடையதில்லை என அரசே எங்களிடம் கொடுத்த ஆவணங்களை காட்டலாம்ன்னு போனா கேஸ் இயரிங் எடுக்கவே மாட்டேங்கறாங்க, கேஸ் போட்ட அவங்களே வாய்தா வாங்கிட்ருக்காங்க.

1970 ஜனவரியில் மந்தைவெளி,
மார்ச்ல தனியார் பட்டா நிலம்… இதை கேட்ட என் மேல் வழக்கு…

அவ்வளவு தாங்க சட்டம்… அனைத்து ஆதாரங்களையும் தந்தும் சாமான்யர்களுக்கான நியாயமான உரிமையை கூட பெற்றுத் தர அதிகாரவர்கம் ஈடுபாடு காட்டுவதில்லை என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.