பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… இயக்குனர் மணிரத்னம் எடுத்த சூப்பர் முடிவு

0
214

பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… இயக்குனர் மணிரத்னம் எடுத்த சூப்பர் முடிவு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை நியாயமான முறையில் நடக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.

சமீபகாலமாக பெரிய நடிகர்கள் மற்றும் பேன் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது சில திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை நடத்தி ரசிகர்களிடம் சுரண்டி வந்தனர். அதே போல அடுத்து வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கும் நடக்கக் கூடாது என படத்தின் இயக்குனர் மணிரத்னம் உத்தரவிட்டுள்ளாராம். முதல் நாள் முதல் காட்சியில் இருந்து அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்றும் அப்போதுதான் மக்கள் குடும்பம் குடும்பமாக வருவார்கள் என்றும் அவர் முடிவு செய்துள்ளாராம்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் சென்ஸார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு திரையரங்கில் பார்க்கலாம். மேலும் படத்தின் ஓடுநீளம் 2 மணிநேரம் 47 நிமிடம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக 2.30 மணிக்கு மேல் இருக்கும் படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்து எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. ஆனால் பொன்னியின் செல்வன் பல கதாபாத்திரங்களின் கதையை சொல்லும் படம் என்பதால் இந்த நீளம் நியாயமானதுதான் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Previous articleஅனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!
Next articleதமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here