கோடை வெயிலை குளுமையாக்கும் “நெல்லி மோர்” – இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?
வெயில் காலத்தில் உடல் அதிகளவு சூடாவது இயல்பான ஒன்று தான்.இருந்தாலும் இந்த உடல் சூட்டால் தலைவலி,கண் தொடர்பான பிரச்சனை,வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே உடல் சூட்டை தணிக்க மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)மோர் – 1 கப்
2)மலை நெல்லிக்காய் – 1
3)சின்ன வெங்காயம் – 4
4)கொத்தமல்லி தழை – சிறிதளவு
5)புதினா – சிறிதளவு
செய்முறை:-
ஒரு மலை நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுத்து நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதேபோல் கொத்தமல்லி மற்றும் புதினா தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் 1/2 கப் அளவு தயிர் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.இவ்வாறு செய்தால் மோர் தயாராகி விடும்.
இந்த மோரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம்,மலை நெல்லி துண்டு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து குடித்தால் உடலில் உள்ள சூடு ஆவியாகி விடும்.கண் எரிச்சல்,தலை வலி,உடல் எரிச்சல் முழுமையாக நீங்கி விடும்.