வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!!

0
135
#image_title

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!!

வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை இந்துக்கள் காலம் காலமாய் செய்து வரும் ஒரு வழக்கம் தான்.விளக்கில் காமாட்சி விளக்கு,குத்து விளக்கு,அகல்,ஐந்து முக விளக்கு என்று பல வகைகள் இருக்கிறது.

அதேபோல் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய்,நெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான்.தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் கடவுளின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதுமட்டும் இன்றி வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி விளக்கில் வரும் வெளிச்சம் போல் வீட்டில் சந்தோசம் பிரகாசிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் வீட்டில் விளக்கு வைப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் விளக்கு வைத்த பின்னர் சில விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

வீட்டில் விளக்கு வைத்த பின்னர் துணி துவைக்க கூடாது.அதேபோல் தலைக்கு குளிக்க கூடாது.
உறங்கவோ,சாப்பிடவோ கூடாது.

அதேபோல் வீட்டில் விளக்கு எரியும் பொழுது அரிசி,பணம் ஆகியவற்றை பிறருக்கு கடனாக கொடுக்க கூடாது.

விளக்கு முழுமையாக எரிந்து எரிந்து அணைய வேண்டும்.இல்லையெனில் ஒரு புஸ்பத்தை கொண்டு அணைக்க வேண்டும்.வாயால் ஊதியோ,கைகளை கொண்டோ அணைக்க கூடாது.