தொடரும் கனமழை! இந்த மாவட்டங்களில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

0
223

கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழர்ச்சியின் காரணமாக, டிசம்பர் மாதம் 2ம் தேதி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ,கேரளா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் வரும் 1ம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் கனமழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

Previous articleஇன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! இந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்! 
Next articleஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here