பொங்கலுக்கு தந்தை கொண்டு சென்ற சீர்! கார் கவிழ்ந்து இருவர் பலியான சோக சம்பவம்! 

0
282

பொங்கலுக்கு தந்தை கொண்டு சென்ற சீர்! கார் கவிழ்ந்து இருவர் பலியான சோக சம்பவம்! 

தனது மகளுக்கு தந்தை சீர் கொண்டு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இருவர் பலியாகி உள்ளனர்.

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சார்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் பாலசுந்தரம். இவரின் மகளான உமாவிற்கு திருமணம் ஆகி இது தலைப்பொங்கல் என்பதால் பொங்கல் படி கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து காக்காமூரில் உள்ள மகள் உமாவின் வீட்டிற்கு சுமோ காரில் பொங்கல் சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றுடன் பாலசுந்தரம் அவரின் மனைவி சுபா வயது 55,  உறவினர்கள் பிரேமா வயது 45,  சுப்புலட்சுமி வயது 55,  உமா வயது50, பாட்டி உலகம்மாள் வயது 75 சிறுமி சுபிக்ஷா ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். காரினை ஜெகன் என்கிற ஜெகநாதன் வயது28  ஓட்டி உள்ளார்.

காரானது நாஞ்சில் புத்தனாறு கால்வாய் வழியாக சாலையில் தாழக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலுள்ள பத்தடி பள்ளத்தில் பாய்ந்து பலமுறை உருண்டு தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் இடுப்பாடுகளில் சிக்கி உமா உலகம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

விபத்து குறித்த தகவலை அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தெரிவித்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து நடந்த இடத்தில் படுகாயம் அடைந்த ஐந்து பேரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.

மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க சென்ற விபத்தில் இருவர் பலியான நிகழ்வைக் கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Previous articleவாரிசு திரைப்படம் பார்க்க சென்ற நடிகை த்ரிஷா!! ரசிகர்களுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!
Next articleதமிழ் மக்களின் டிஎன்ஏவில் சினிமா!  வாரிசு துணிவு குறித்து பாமக தலைவர் பேச்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here