இன்று (15.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

இன்று (15.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

இன்று (15.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமைகிறது. தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எவ்வித மாற்றமுமின்றி அமைந்தது. அதன்படி இன்று (15.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 86 ஆகவும் விற்கப்படுகிறது. கோவையில் இன்று லிட்டருக்கு … Read more

ஐபிஎஸ் போட்டி தேர்வை தமிழில் எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி:!

ஐபிஎஸ் போட்டி தேர்வை தமிழில் எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி:!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழில் எழுத விரும்பும் மாணவா்களுக்கு வழிகாட்டும் நோக்கில் மத்திய அரசுப் பணியாளா் தோவாணையம் இலவச இணைய வழி கருத்தரங்கம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்16), காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை நடத்தப்படவுள்ளது. இந்தக் கருத்தரங்கை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நடத்துகிறது. இதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு,மாணவர்களுக்கு தேர்வு எழுதும் முறை தேர்வுக்காக படிக்கும் முறை இது போன்ற … Read more

“திணிக்காதே திணிக்காதே பறிக்காதே பறிக்காதே தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்காதே” மத்திய மாநில அரசுக்கு கண்டனம்?

"திணிக்காதே திணிக்காதே பறிக்காதே பறிக்காதே தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்காதே" மத்திய மாநில அரசுக்கு கண்டனம்?

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அலுவலகங்களிலும் தமிழர்களை விட வட இந்தியர்களையே அதிகம் பணியமர்த்தபடுவதாக, குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணமே இருக்கின்றது.அந்த வகையில் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற் சாலையில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் Grade-3 தொழில்நுட்ப பணியாளர்கள் நியாமனம் செய்ததில், 540 பணியாளர்களில் 15 பேர் மட்டுமே தமிழர்கள் என தெரியவந்துள்ளது.இதனால் இந்த பணி நியமன ஆணைகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தமிழக … Read more

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா பாஜக? கூட்டணி குறித்து முருகன் விளக்கம்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா பாஜக? கூட்டணி குறித்து முருகன் விளக்கம்

தமிழகத்தில் தற்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்து வருகிறது. என்ன நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளதாவது, “இன்று அதிமுகவுடன் கூட்டணி உள்ளது நாளை அது வேறாக இருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர். இதில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அதிமுக பாஜக கூட்டணியா? இல்லை பாஜக திமுக உடன் கூட்டணியா? திமுக … Read more

இனி செவ்வாய்தோறும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

இனி செவ்வாய்தோறும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை தோறும் இனி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்றால் சில தளர்வுகள் உடன் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முழு ஊரடங்கு உத்தரவு வாரத்தில் ஞாயிறு தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் அரசு விழாவும், ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் என்பதாலும் முழு ஊரடங்கு உத்தரவினை வார இறுதியில் பின்பற்றாமல் செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கு புதுச்சேரியில் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி … Read more

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று! சுகாதாரத்துறை தகவல்..

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று! சுகாதாரத்துறை தகவல்..

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 114 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,514 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இன்று மட்டும் 5,556 பேர் … Read more

8வழிச் சாலையை 2025க்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: அன்புமணி கண்டனம்

8வழிச் சாலையை 2025க்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: அன்புமணி கண்டனம்

சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை 2025 க்குள் முடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையானது, “சென்னையில் இருந்து சேலம் செல்லும் 8 வழி சாலை அமைப்பதை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில்  2025-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தினை செயல்படுத்தி விடுவோம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் … Read more

வைட்டமின் ஏ மருந்து வழங்கும் முகாம் 24 ஆம் தேதியிலிருந்து ஆரம்பம்:! குழந்தை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வைட்டமின் ஏ மருந்து வழங்கும் முகாம் 24 ஆம் தேதியிலிருந்து ஆரம்பம்:! குழந்தை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து மருத்துவ முகாமின் மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றது.இந்த வைட்டமின் ஏ மருந்தானது குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் அறிவுசார் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. தற்போது நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டடுள்ளது.இதனால் மக்கள் கூட்டம் கூடினால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.ஆனால் இந்த விட்டமின் ஏ மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது.எனவே தான் தமிழக அரசு ஐந்து வயதுக்கு உட்பட்ட … Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஆளுநர்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஆளுநர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனிடையே சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று … Read more

நிவாரணத்தொகை பெறுவதற்கு மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்!! மாவட்ட ஆட்சியர் தகவல்..

நிவாரணத்தொகை பெறுவதற்கு மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்!! மாவட்ட ஆட்சியர் தகவல்..

மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெறாதவர்கள் இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தகவல் தெரிவித்துள்ளார். சிவகங்கை: கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 22 வகையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், கபசுரகுடிநீர் பாக்கெட்டுகள், முக கவசங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் … Read more