வைட்டமின் ஏ மருந்து வழங்கும் முகாம் 24 ஆம் தேதியிலிருந்து ஆரம்பம்:! குழந்தை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
70

தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து மருத்துவ முகாமின் மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றது.இந்த வைட்டமின் ஏ மருந்தானது குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் அறிவுசார் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

தற்போது நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டடுள்ளது.இதனால் மக்கள் கூட்டம் கூடினால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.ஆனால் இந்த விட்டமின் ஏ மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது.எனவே தான் தமிழக அரசு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவ மருந்து வழங்கும் முகாம் வரும் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.மேலும் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த முகாம் ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு நாட்கள் வரை நடக்க உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் அங்கன்வாடி மைங்களில், செவ்வாய், புதன் மற்றும் ஞாயிறு தவிர்த்து, பிற நாட்களில் முகாம் நடத்தப்பட உள்ளது.60 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகின்றது.

author avatar
Pavithra