காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு காஷ்மீர் பிரச்சனையை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22ம் தேதி திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஆர்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் தலைவர்களை கைது செய்து, அறிவிக்கப்படாத … Read more

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம்

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம் கடந்த முறை பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்தது முதல் பல்வேறு மாநிலங்களில் தங்களுடைய ஆட்சியை ஏற்படுத்த அக்கட்சி முயற்சித்து வருகிறது. இவ்வாறு பாஜக ஆளாத மற்ற மாநிலங்களிலும், அக்கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சியில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக இருந்த குமாரசாமியின் அரசு கலைக்கப்பட்டு, அங்கு, பாஜக தலைமையிலான … Read more

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி

Minister Sengottaiyan accepts H.Raja request-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி தமிழக பள்ளிகளில் சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கயிறு கட்ட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் எச்.ராஜாவிற்கு ஆதரவாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தம்முடைய கருத்தை தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சாதி மற்றும் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் தங்கள் கைகளில் கயிறுகளை கட்டி வருவது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட … Read more

ஒரே ஒரு கோரிக்கையால் திமுக எம்.பிக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிமுகவின் ரவீந்திரநாத்

ஒரே ஒரு கோரிக்கையால் திமுக எம்.பிக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிமுகவின் ரவீந்திரநாத் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்ததற்கு அ.தி.மு.க தரப்பு ஆதரவு தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய ரவீந்திரநாத் குமார் கூறியதாவது. 1984-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநிலங்களவையில் பேசியபோது, “ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கபட வேண்டும். ஏன் அது இன்னமும் தாமதம் ஆகிறது” என்று குறிப்பிட்டிருந்தார். இன்று நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், … Read more

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சென்னை சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைப்பதற்கான தடையை நீக்கக் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. சென்னை டூ சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதை எதிர்த்து விவசாயிகள்,அரசியல் … Read more

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா? ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா? குழப்பத்தில் பாஜக!

Who is the Next Union Minister from Tamil Nadu-News4 Tamil Online Tamil News Channel1

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா? ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா? குழப்பத்தில் பாஜக! நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக,பாமக,தேமுதிக போன்ற தமிழக கட்சிகள் கூட்டணியான பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய அளவில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. இந்த கூட்டணியில் தமிழகத்தில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ஒபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றது முதல் அவர் அமைச்சர் ஆக போகிறார் … Read more

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் 4000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை மிகக்குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்க வைத்து சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணை மீது, … Read more

திமுக நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கலைக்க முடியும்! திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

திமுக நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கலைக்க முடியும்! திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேச பேச்சு திமுகவினர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியும். ஆனால், கருணாநிதியின் கொள்கையால் நாம் அவ்வாறு செய்யாமல் இருந்துவருகிறோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார். வேலூரில் திமுகவினர் வாக்குக்கு பணம் கொடுத்ததாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்ட பின் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்ட தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மீண்டும் நடைபெற உள்ளது. … Read more

சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா!

Suriya Joins with BJP MP-News4 Tamil Online Tamil News

சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா! கடந்த சில நாட்களாக மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூர்யா நடித்து முடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்நிலையில் அவர் தற்போது ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதாகொங்காரா இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் … Read more

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !!

Pon Radhakrishnan Condemn Kanchipuram District Collector-News4 Tamil Online Tamil News Chennal3

அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? பொங்கிய பொன்னார் !! காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க வருவதை பொது மக்களின் பாதுகாப்பு கருதி முதியோர், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தி வரதர் தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து … Read more