தடுப்பு மருந்தை ஏற்கனவே வாங்கிய பணக்கார நாடுகள்

தடுப்பு மருந்தை ஏற்கனவே வாங்கிய பணக்கார நாடுகள்

பணக்கார நாடுகள், எதிர்காலத்தில் வரப்போகிற கொரோனா தடுப்பு மருந்துகளில் பாதியை ஏற்கெனவே வாங்கிவிட்டதாக Oxfam வெளியிட்ட ஆய்வு கூறுகிறது. அந்தப் பணக்கார நாடுகளின் மொத்த மக்கள்தொகை, உலக மக்கள் தொகையில் 13 விழுக்காடு மட்டுமே. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னிலையில் உள்ள 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களும் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அரசாங்கச் சார்பற்ற அமைப்பான Oxfam ஆராய்ந்தது. அந்த 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களின் மொத்த உற்பத்தித் திறன் 5.9 பில்லியன் மருந்து அளவு என Oxfam … Read more

உலகம் முழுவதும் இத்தனை மில்லியனை தாண்டிய கொரோனா

உலகம் முழுவதும் இத்தனை மில்லியனை தாண்டிய கொரோனா

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30 மில்லியனைத் தாண்டியுள்ளது; கிட்டத்தட்ட 9.5 லட்சம் பேர் மாண்டுவிட்டனர். இந்நிலையில், ஐரோப்பாவில் கிருமித்தொற்று அபாயகரமான வேகத்தில் பரவுவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சில நாடுகள் தனிமைப்படுத்தும் காலத்தைக் குறைப்பதற்கு எதிராக அது கருத்துரைத்தது. கடந்த 2 வாரங்களில் பாதிக்கும்-மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கிருமித்தொற்று உறுதியாவோர் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கும்-மேல் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 6.6 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

தடுப்பு மருந்து திட்டத்திற்கு இத்தனை மில்லியன் டாலரா

தடுப்பு மருந்து திட்டத்திற்கு இத்தனை மில்லியன் டாலரா

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஒன்றரை டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியது. அதிலிருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதியளிக்கப்படும். உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து திட்டத்திற்கு 165 மில்லியன் டாலர் நிதி வழங்க ஜப்பான் உறுதிகூறியுள்ளது. உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் நியாயமாகவும் சிறந்த முறையிலும் விநியோகிக்கப்படுவதை COVAX திட்டம் உறுதிசெய்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் சொந்த தடுப்பு மருந்துகளைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. உலகளாவிய மருந்து … Read more

மாஸ்குக்கு பதில் பாம்பை அணிந்த வந்த நபர்

மாஸ்குக்கு பதில் பாம்பை அணிந்த வந்த நபர்

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன. தற்போதுதான் முடக்கங்கள் தளர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும் அனைத்து நாடுகளிலும் மாஸ்க் அணிவது கட்டயமாக்கப்பட்டது. அந்த வகையில் பிரிட்டனில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் ஒரு நபர் மாஸ்க் அணிவதற்கு பதிலாக பாம்பையே மாஸ்காக அணிவித்துள்ளார். இது சக … Read more

ஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி

ஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல துறைகளும் முடக்கத்தில் இருந்தன. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஹாங்காங்கில் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை பெரிய அளவில் நடத்தப்பட்டது. அதில் சுமார் 2 மில்லியன் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 42 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. இப்போது நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் காரணமாக மூடப்பட்ட மதுபானக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

புதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா

புதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா

ருய்லீ என்ற  நகரை சீனா முடக்கியுள்ளது இந்த ருய்லீ நகர் சீன மியன்மார் எல்லைக்கு அருகில் உள்ளது. சிறிய அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்கு பதிவாகியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகர மக்களை வீட்டில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். நகருக்குள் செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதியில்லை. அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மியன்மாரில் இருந்து ருய்லீ நகருக்கு நோய் பரவியதாய்ச் சீன அதிகாரிகள் கூறுகின்றனர். சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் … Read more

கொரோனா தடுப்பு மருந்து எப்போதுதான் தயாராகும்

கொரோனா தடுப்பு மருந்து எப்போதுதான் தயாராகும்

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வுகான் நகரில் உருவான கொரோனா கிருமித்தொற்று உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சீனா வெளியிட்ட தகவலின்படி வருகின்ற நவம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என தெரிவித்துள்ளது. மேலும் சீனா நான்கு வித தடுப்பு மருந்துகளை பரிசோதனை செய்து வருகிறது நவம்பர் அல்லது டிசம்பரில் தடுப்பு மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும் … Read more

வெளிநாட்டு ஊழியர்களை காக்க புதிய திட்டம் வகுக்கப்படும்

வெளிநாட்டு ஊழியர்களை காக்க புதிய திட்டம் வகுக்கப்படும்

கொரோனா என்ற வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அவர்கள் நோய்த்தொற்றிலிருந்து  பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விடுதிக்கு சம்பந்தபட்டவர்களான உள்ளிட்ட தரப்புகளுடன் அதன் தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒரே இடத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் வெவ்வேறு விடுதிகளில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, … Read more

இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்

இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்

இத்தாலியில் அண்மை நாள்களில் அங்கே கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இரவுக் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றுவந்த இளையர்களே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குரோஷியா, கிரீஸ், மால்ட்டா போன்ற நாடுகளுக்கு அதிகமானோர் சென்று வந்ததும் அதற்கு மற்றொரு காரணம். கோடைக்காலம் முடிந்து, இம்மாதமும் அடுத்த மாதமும் பயணிகள் வரத்தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கிருமிப்பரவல் காரணமாக உள்நாட்டுப் பயணிகளே பிற நகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். எனவே, வெளிநாட்டுப் பயணிகளின் வருகை குறித்த நம்பிக்கை குறைந்து விட்டது. ஏற்கெனவே … Read more

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் ஆகும். அதே போல இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் கொரோனா கிருமிப்பரவல் அதிகரித்துவருவதை முன்னிட்டு மீண்டும் முடக்கநிலை நடப்புக்கு வரவிருக்கிறது. இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் … Read more