ஹைதராபாத் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது!

ஹைதராபாத் மாநிலத்தில் டிசம்பர் 1ஆம் தேதியன்று மாநகராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. சுமார் 150 வார்டுகள் உள்ளன. அங்கு மொத்தம் 75 லட்சம் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தல் அன்று, காலை நேரத்தில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு சில மணி நேரங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆயினும் 34 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாம். தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் … Read more

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் இன்று முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். ஏற்கனவே இவர் மூன்று முறை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது இவர் நான்காவது முறையாக பீகார் முதலமைச்சர் ஆகிறார். பீகார் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் … Read more

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்த டுவிட்டர் நிறுவனம்!

இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் பதவிக்கான தேர்தல் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு, டுவிட்டர் நிறுவனம் பகிரங்கமாக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. டுவிட்டர் நிறுவனம் தேர்தலில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளையோ, தேர்தல் சம்பந்தமான குளறுபடிகளை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளையோ, தனது சேவைகளை பயன்படுத்தி இவ்வாறான செயல்களை செய்யக்கூடாது என்ற கொள்கைகளை ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பின்பற்றி கொண்டு வருகிறது. இந்நிலையில் … Read more

மேலவையில் பாஜகவுக்கு பலம் அதிகரிப்பு – எப்படி தெரியுமா?

மேலவையில் பதினோரு உறுப்பினர்களின் பதவி காலம் ஆனது இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த பதினோரு நபர்களும் உத்திரபிரதேச மாநிலம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.  தற்போது இவர்களின் பதவிக்காலம் முடிவுற்றதால், மீண்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நாள் நவம்பர் 9ஆம் தேதி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான காலம் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.  உத்திரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள பத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு, … Read more

‘மக்கள் நீதி மய்யம்’ ஆலோசனை கூட்டம் – கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது!

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என அனைவருடனும் ஆலோசனை நடத்துகிறார் கமல்ஹாசன் தேர்தல் வேலைகள் குறித்தும், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்தும், மக்களின் நன்மைகள் என பலவற்றைப் பற்றி ஆலோசனை நடத்துகிறார். இன்று துவங்கிய இந்த ஆலோசனை கூட்டமானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுமாம். அதுமட்டுமன்றி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மற்றும் மண்டல செயலாளர்கள், அந்தந்த தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என சுமாராக 800 நபர்கள் வரை இக்கூட்டத்தில் கலந்து … Read more

வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை – சிக்கியதா காங்கிரஸ்?

வருமான வரித்துறையினர் திடீரென்று மேற்கொண்ட அதிரடி சோதனையால் ரூபாய் எட்டு லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பீகார் மாநிலத்திலுள்ள, பாட்னாவில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து பணம் பறிமுதல். பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்து வரும் நிலையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், இந்த ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த பணம் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதா? என்ற கோணத்திலும் … Read more

திமுக தொண்டர்களுக்கு – அலட்சியம் காட்ட வேண்டாம் என்று ஸ்டாலின் வலியுறுத்தல்!

விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தொண்டர்களை அழைத்து கட்சியின் தேர்தல் கொள்கைகளைப் பற்றியும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஆலோசித்து உள்ளார் மு.க.ஸ்டாலின். இன்று தெற்கு மண்டல பகுதியை சேர்ந்த தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் வருகின்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்கு நம்மால் இயன்ற நற்பணிகளை, நம் கட்சி சார்பாக … Read more

அதிமுக கட்சியில் அதிகாலை வரை நடந்த ஆலோசனைக் கூட்டம்! முதலமைச்சர் வேட்பாளர் யார்?

அதிமுக கட்சியில் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது அனைவரும் அறிந்ததே. அதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அப்போது 11 பேர் கொண்ட குழு அமைத்து ஒவ்வொரு முடிவையும் முழுமையாக பரிசீலனை செய்த பிறகே இறுதி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இந்த பதினோரு பேர் கொண்ட குழு … Read more

முதலமைச்சர் பதவி யாருக்கு? பரபரப்பான இறுதி கட்ட ஆலோசனை!

கடந்த மாத இறுதியில் அதிமுக கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அப்போது எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளிப்படையாகவே மோதல் நடந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின் பன்னீர்செல்வம் அவர்கள் பெரிய குளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு அவரை அவரின் அதிமுக தொண்டர்கள் … Read more

வேளாண் மசோதாகளுக்காக இரு துருவங்களாக மாறிய அதிமுக!சட்டமன்றத் தேர்தலின் நிலை!

மக்களவையில் வேளாண்துறை சார்ந்த மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மசோதா,விவசாயிகள் விலை உறுதி மற்றும்  பண்ணை சேவைகள் மசோதா,அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவையே 3 மசோதாக்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.யான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். இந்த மசோதாக்கள் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேளாண் மசோதாக்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் … Read more