ஆஸ்திரேலியாவில் நீடிக்கபோகும் நெருக்கடிநிலைக்கான கால வரம்பு

ஆஸ்திரேலியாவில் நீடிக்கபோகும் நெருக்கடிநிலைக்கான கால வரம்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம், நெருக்கடிநிலைக்கான கால வரம்பை நீட்டிக்க, அதன் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது. தற்போது அங்கு 6 மாதங்களுக்கு மட்டுமே நெருக்கடிநிலையை அமல்படுத்த இயலும். கால வரம்பை 18 மாதங்கள் வரை நீட்டிக்க விக்டோரியா மாநில அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். புதிய சட்டங்களால், நெருக்கடிநிலை முடிந்த பின்னரும், கடுமையான பொதுச் சுகாதார நெறிமுறைகளை அமலாக்க முடியும். ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இன்று கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கிடையே கூடவுள்ளது. முதல்முறையாக, உறுப்பினர்கள் சிலர் காணொளி வழியாக நாடாளுமன்றக் … Read more

முகக் கவசம் இல்லை எனில் பயணம் செய்ய முடியாது?

முகக் கவசம் இல்லை எனில் பயணம் செய்ய முடியாது?

விமானத்தில் செல்வோர் முகக் கவசம் அணிய மறுத்தால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா சூழலில், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, பயணிகள் முகக் கவசம் அணிவது முக்கியம் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது. மிகப் பெரும்பாலான பயணிகள், அதன் அவசியத்தை உணர்ந்து தவறாமல் அதைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அண்மையில் பயணிகளில் சிலர் முகக் கவசம் அணிய மறுத்து விமானப் பணியாளர்களோடு பூசலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாயின. மிகச் சிலரது … Read more

அதிபர் தேர்தலில் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெற வாய்ப்பு

அதிபர் தேர்தலில் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெற வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், எதிர்த்தரப்பினர் திருட்டுத்தனமான முறையில் வெற்றி பெறக்கூடும் எனத் தமது குடியரசுக் கட்சியினரை எச்சரித்துள்ளார். கொரோனா சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கர்களை ஏமாற்றும் முயற்சியில் எதிர்த்தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக அவர் குறைகூறினார். ஜனநாயகக் கட்சி நடத்திய மாநாட்டில், எதிர்மறை அம்சங்கள் நிறைந்திருந்ததாகக் குடியரசுக் கட்சியினர் கூறினர். ஆனால், தங்களது மாநாடு அவ்வாறு இல்லாமல் நடைபெறுமென அவர்கள் உறுதி கூறினர். இதுவரை வெளியிடப்பட்ட முன்னோடிக் கருத்துக் கணிப்புகளில், ஜனநாயகக் … Read more

தெண்டுல்கரின் சாதனையை இவரால் மட்டும்தான் முறியடிக்க முடியும்

தெண்டுல்கரின் சாதனையை இவரால் மட்டும்தான் முறியடிக்க முடியும்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை மற்றவர்கள் எட்டுவது கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடிக்க வேண்டும் என்று விராட்கோலி வெளிப்படையாக பேசாவிட்டாலும், அந்த சாதனை குறித்து அவர் மனதில் நினைத்து இருக்கலாம் என்று … Read more

மன்கட் என்ற பெயரை பயன்படுத்துவதே தவறு

மன்கட் என்ற பெயரை பயன்படுத்துவதே தவறு

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் அளித்த ஒரு பேட்டியில், ‘கிரிக்கெட்டில் வினோ மன்கட் செய்து இருக்கும் சாதனைகளுக்காக நினைவு கூறாமல் எதிர்மறையான கருத்து கொண்ட ‘ரன்-அவுட்’டுக்கு அவரது பெயரை பயன்படுத்துவது தவறானதாகும். பந்து வீசும் முன்பு பவுலர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு முன்னேறினால் ரன்-அவுட் செய்யலாம் என்று விதிமுறை உள்ளது. அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் எம்.சி.சி. ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளன. … Read more

மூன்றாம் கட்ட சோதனையில் கொரோனா தடுப்பூசி

மூன்றாம் கட்ட சோதனையில் கொரோனா தடுப்பூசி

கொரோனா உருவான சீனாவும் தான் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பல நாட்களாக தெரிவித்து வருகிறது. மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள உலகின் ஏழு தடுப்பூசிகளில் நான்கு சீனாவிலில் உள்ளன. சினோவாக் பயோடெக் கொரோனாவாக் என்ற மூன்றாவது தடுப்பூசியை உருவாக்கி வருகிறது, அதே நேரத்தில் கேன்சினோ பயோலாஜிக்ஸ் Ad5-nCoV இல் மாநில இராணுவ ஆராய்ச்சி பிரிவு அகாடமி ஆஃப் மிலிட்டரி மெடிக்கல் சயின்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.  ஜூலை மாதம் இந்த திட்டத்தை உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முன்பு, ஜூன் … Read more

பாகிஸ்தானின் சதியை அம்பலமாக்கிய இந்தியா

பாகிஸ்தானின் சதியை அம்பலமாக்கிய இந்தியா

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் மிஷன் ஒரு டுவீட்டில் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் பாதுகாப்பு சபையின் விவாதத்தில் “பயங்கரவாத நடவடிக்கைகளால் முன்வைக்கப்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள்” குறித்து பொதுச்செயலாளரின் அறிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என் கூறியது. ஐ.நா.வில் இந்தியா அதனை  சுட்டிக்காட்டி, ஐ.நா.வுக்கு பாகிஸ்தான்  வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் கண்டிருக்கிறோம்,  மேலும் இந்திய தரப்பில் கூறும் போது ஐக்கிய நாடுகளால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தான் அதிக அளவில் உள்ளனர்.  மற்றும் அனுமதிக்கப்பட்ட … Read more

பிளாஸ்மா சிகிச்சை முழுமையான தீர்வை தராது?

பிளாஸ்மா சிகிச்சை முழுமையான தீர்வை தராது?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிளாஸ்மா சிகிச்சை என்பது சோதனைக்குரியது மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதர அமைப்பு அதுவே முடிவானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சார்பில் பிளாஸ்மா சிகிச்சை அவசரகால … Read more

லண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

லண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை 18,955 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள … Read more

நடிகை வனிதாவிற்கு நேர்ந்த சோகம் என்ன தெரியுமா?

நடிகை வனிதாவிற்கு நேர்ந்த சோகம் என்ன தெரியுமா?

நடிகர் விஜயகுமாருக்கும் பழம்பெரும் நடிகை மஞ்சளாகவிற்கும் மூத்த மகளான நடிகை வனிதா பிக் பாஸ் மூலம் தமிழக திரையுலகத்திற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார். இவர் பிக்பாஸில் இருந்தே மக்களிடம் மிகவும் வைரலாகி வருகிறார். இவருடைய வெளிப்படையான பேச்சு, சட்டென்று எடுக்கும் முடிவுகள், இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள், கம்பீரமான தோற்றம் இதற்குக் காரணம் எனலாம். மேலும் இவர் விஜய் டிவியில் நடத்தப்பட்ட குக் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு டைட்டிலை வின் செய்தார். அதோடு அவருடைய சமையல்களும் … Read more