சிக்கி தவிக்கும் பிரேசில்

சிக்கி தவிக்கும் பிரேசில்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் ஷான் மசூத் (156), பாபர் அசாம் (69), சதாப் கான் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்து அல்-அவுட் ஆனது. இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து  4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. யாசீர் ஷா பட்லர் (38), கிறிஸ் வோக்ஸ் (19), பெஸ் (1) ஆகியோரை … Read more

இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு போட்டியும் கடந்த மூன்று மாதமாக நடைபெறவில்லை. இதனால் ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் தள்ளிபோனது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.  அங்கு கொரோனா அதிகரித்து வருவதால் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் … Read more

கொரோனாவால் திணறும் அமெரிக்கா

கொரோனாவால் திணறும் அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் … Read more

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள்  கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

லெபனான் நாட்டிற்க்கு தேடி வரும் உதவிகள்

லெபனான் நாட்டிற்க்கு தேடி வரும் உதவிகள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நடந்த வெடிப்பில் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில்  150 பேர் இறந்தனர். ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர். இந்த நிலையில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லெபனானுக்கு பல்வேறு வகைப்பட்ட உதவிகள்  சேர்ந்தவண்ணம் உள்ளன. இந்த வெடி விபத்தானது மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமானது.

சவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றசாட்டு

சவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றசாட்டு

சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த மனு அமெரிக்காவின் உள்ள  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது கனாடா எல்லைப்படையினருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, ஜாப்ரியை கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பேஸ்புக் நிறுவனம்

ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பேஸ்புக் நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெறும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது.  இதனால் பொருளாதார தேக்கநிலையும் உருவாகி உள்ளது. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள்  அனைத்தும் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  அந்த அறிக்கையில், சுகாதார மற்றும் அரசு நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி சூழலை பற்றி உள்மட்ட அளவில் … Read more

கிராண்ட்ஸ்லாம் பரிசுத்தொகை குறைப்பு

கிராண்ட்ஸ்லாம் பரிசுத்தொகை குறைப்பு

அமெரிக்காவில் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி மொத்த பரிசுத்தொகை ரூ.400 கோடியாகும். இது 2019-ம் ஆண்டை விட ரூ.28 கோடி குறைவாகும். அதே சமயம் முதல் சுற்றில் வெற்றி பெறுவோருக்கு மட்டும் 5 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு ரூ.45 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. … Read more

குற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி

குற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி

சீனாவில் ஜாங் யுகுவான் என்பவர் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு  பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். ஆனால் அவர் போலீஸ் என்னை துன்புறுத்தியதால் தான் பழியை ஏற்றுகொண்டடேன் என்று கூறினார். ஐகோர்ட்டில் இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் எழுந்து மறு விசாரணை நடந்தது. அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்க … Read more