அதிர்ச்சியில் ராமதாஸ்! வன்னிய சங்கத்தின் முக்கிய தலைவர் கொரோனாவால் மரணம்! மனைவி, மகனின் பரிதாப நிலை!

Ramadoss

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 1,437 பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர், 902 பேர் குணமடைந்துள்ளனர்.நேற்று மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக, ஐடி நிறுவனங்களை கடந்து தற்போது கொரோனா தொற்றின் பரவல் தேர்தல் களத்திலும் எதிர்விளைவுகளை உண்டாக்கி வருகிறது. இந்நிலையில் சேலத்தில் வன்னியர் சங்கத்தின் முக்கிய … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெளியானதும் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெளியானதும் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 10 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 23 தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில், மீதம் இருக்கின்ற நான்கு தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேட்டூர் தொகுதியில் சதாசிவம் அவர்களும், பூந்தமல்லி தொகுதியில் … Read more

பாட்டாளி மக்கள் கட்சி விட்டு அசத்தும் தேர்தல் அறிக்கை! மூக்கின் மேல் விரல் வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

பாட்டாளி மக்கள் கட்சி விட்டு அசத்தும் தேர்தல் அறிக்கை! மூக்கின் மேல் விரல் வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டிலே சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை காணொலிக் காட்சி மூலமாக வெளியிட்டிருக்கின்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் எல்லோருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் … Read more

இட ஒதுக்கீடு! அயல்நாட்டிலிருந்து ஐயாவிற்கு வந்த வாழ்த்துச்செய்தி!

இட ஒதுக்கீடு! அயல்நாட்டிலிருந்து ஐயாவிற்கு வந்த வாழ்த்துச்செய்தி!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெகுகாலமாக ஆளும் கட்சிக்கு வைக்கப்பட்ட கோரிக்கை வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை அந்த கோரிக்கையானது சுமார் 40 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியாலும் மருத்துவர் அய்யா அவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனை பெரிய அளவில் எந்த ஒரு ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது தற்போது முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து மருத்துவர் அய்யாவின் நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக … Read more

விவசாய கடன்கள் தள்ளுபடி! முதல்வரை பாராட்டிய மருத்துவர் அய்யா!

விவசாய கடன்கள் தள்ளுபடி! முதல்வரை பாராட்டிய மருத்துவர் அய்யா!

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறார். இந்த நடவடிக்கையானது சரியான நேரத்தில் தான் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் சென்ற டிசம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக, … Read more

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு! அதிமுக கிரீன் சிக்னல்!

நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அதிமுக இருக்கும் இதையே வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு, மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது இட ஒதுக்கீடு குறித்து எந்த ஒரு முடிவும் உறுதியாக எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியோ நாங்கள் உங்களுடைய கூட்டணியில் தொடர்ந்து இருப்பது நீங்கள் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டது .முன்னரே இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு … Read more

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

பட்டியல் இன மக்களுக்கு எதிரான கட்சி பாமக என்று பொதுவாக பேசிவரும் நிலையில் ,அகில இந்திய பட்டியல் இன பேரவை சார்பாக பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக முதல்வருக்கு கடிதம் எழுதியது அரசியல் வட்டாரங்களில் வியப்பாக பேசப்பட்டு வருகிறது.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற சொல்லி டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தற்போது வரை 5 கட்டங்களாக பாமகவும் மற்றும் வன்னியர் அமைப்புகளும் சேர்ந்து போராடிக்கொண்டு வருகிறது.

இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே நாடார் சங்கங்கள் அருந்ததியர் அமைப்புகள் ஆதரவு அளித்து வந்தன. அதேபோல் புதிய தமிழகம் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

தற்போது பாமகவின் ஆறாவது கட்டம் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதில் வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உள் இட ஒதுக்கீடு கேட்டு தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்தினார்கள் .இந்த போராட்டத்தில் எப்பொழுதும் இல்லாத அளவு அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள் .மேலும் இந்தப் போராட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி திமுக அதிமுக தேமுதிக கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் வியப்படையச் செய்தது.

அதுமட்டுமல்லாமல் அகில இந்திய பட்டியல் இன எழுச்சி பேரவையின் மாநில துணைத் தலைவர் வீ. மாரியப்பன் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

 

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவர் ராமதாசின் அழுத்தத்தின் பேரில் தான் கிடைத்தது, இப்போது வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு கோரி அறவழியில் டாக்டர் . இராமதாஸ் அவர்கள் போராடி வருவது நியமாகவும் , நேர்மையாகவும் தெரியவருகிறது . வன்னியர்களின் அதிகம்பேர் வருமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் இது மறுக்கமுடியாத உண்மை . வன்னியர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடை வழங்கி உதவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்த கோரிக்கையை தங்களின் மேலான பார்வைக்கு பணிவுடன் சமர்பிக்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்து வரும் நிலையில், தமிழக அரசு வன்னியர்களின் கோரிக்கையை கண்டுக்காமல் நிராகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக தரப்பில் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது உயிர்த்தியாகம் செய்து இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த வன்னியர் சமுதாயத்துக்கு 20% சதவீதத்தில் கிடைக்கும் பிரதிநிதித்துவம் 3.5% மட்டும் தான்,
எதுவுமே செய்யாத 4 சாதிகளுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் 8 %
இது எவ்வளவு பெரிய அநியாயம்.அதனால் தான் வன்னியர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு தருமாறு கேட்டு போராடி வருகிறோம் என்கிறார்கள் பாமகவினர்.

பாமகவிற்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்து கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டால் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் அதிரடி முடிவெடுத்த ராமதாஸ்!

இட ஒதுக்கீடு போராட்டத்தில் அதிரடி முடிவெடுத்த ராமதாஸ்!

மாற்றம் முன்னேற்றம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஆனாலும் அவருடைய ஆதரவாளர்களோ போராட்டம் என்ற பெயரில் ரயில் மீது கல்லெறிதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் இதுதான் உங்களுடைய மாற்றம் முன்னேற்றம் என்று சமூக வலைதளங்களில் பலரும் அவர்களது செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாயத்தினர் அரசியல்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. குறிப்பாக வன்னியர்களுக்கு 15 … Read more

நிர்வாகிகளிடம்! ரகசியத்தை உடைத்த ராமதாஸ்!

நிர்வாகிகளிடம்! ரகசியத்தை உடைத்த ராமதாஸ்!

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியை விட வேறு சிறந்த கூட்டணி பாமகவுக்கு கிடையாது அந்த கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் ராமதாசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான, அமித்ஷா சென்னை வந்து சென்றார். கூட்டணி கட்சிகள் என்ற முறையில் தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் அவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பல காரணங்களை தெரிவித்து பாமக, மற்றும் தேமுதிக, ஆகிய கட்சிகள் அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்து … Read more

எச்சரிக்கை செய்த ராமதாஸ்! அலார்ட் ஆன ஈபிஎஸ்!

எச்சரிக்கை செய்த ராமதாஸ்! அலார்ட் ஆன ஈபிஎஸ்!

இந்தியாவில் நோய்த்தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது ஆனால் உலகின் பல நாடுகளில் குறைந்து இருந்த நோய்த்தொற்று இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது அதிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகின்றது அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. அதேபோல இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் இந்த தொற்றின் இரண்டாவது அலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது இந்த நிலையில் குளிர்காலத்தில் இந்த தொடரின் … Read more