வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த 6 மாவட்டங்கள்  மற்றும் வட மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி, தர்மபுரி ,திருவண்ணாமலை ,வேலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகயும் , வெற்பசலனம்  பொருத்தவரை அதிகபட்ச வெப்ப நிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸாக  பதிவாக கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை திருப்பத்தூர் (வடபுதுப்பட்டு) , கடலூர்(வேப்பூர்),ஆகிய பகுதிகளில் 13 சென்டிமீட்டர் மழையும்,கடலூர் (சிதம்பரம்), திருவண்ணாமலை (கலசபாக்கம்) பகுதிகளில் 9 சென்டி மீட்டர் மழையும் ,ராணிப்பேட்டை (காவேரிப்பாக்கம்),ஈரோடு (கோபிசெட்டிபாளையம்) கரூர் (மைலம்பட்டி),திருப்பத்தூர் (வாணியம்பாடி) ஆகிய பகுதிகளில் ஏழு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் மத்திய வங்கக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதினால், தென்மேற்கு திசையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வாய்க்கால் நிரம்பி வயலில் தண்ணீர் சென்றதனால் விவசாயிகள் போராட்டம் :!

வாய்க்கால் நிரம்பி வயலில் தண்ணீர் சென்றதனால் விவசாயிகள் போராட்டம் :!

மயிலாடுதுறைஅருகே வாய்கால் நிரம்பி விவசாயிகளின் நிலத்தில் தண்ணீர் புகுந்து 50 ஏக்கர் நிலம் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே பரமக்குடியில் செல்லும் கஞ்சநகர் வாய்க்கால் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, பின்ன்ர் வாய்க்கால் மூலம் மணக்குடி அகரமாங்குடி பகுதியில் வடிகால் வாய்க்கால்களை கஞ்சா நகர் மற்றும் கரூர் குளித்தலை மிட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் … Read more

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நிலவி வரும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக , தமிழகத்தின் உள் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி ,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக புதுச்சேரி, … Read more

இன்று தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

இன்று தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

இன்று பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இன்று பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த தர வரிசை பட்டியலானது, செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில்,சான்றிதழ் பதிவு பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்காக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனாவால் மாணவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் கால அவகாசம் கேட்டதனை தொடர்ந்து, வெளியிடப்பட்டிருந்த தரவரிசை பட்டியலானது தாமதமாக இன்று  வெளியிடப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் 458 கல்லூரிகளில் … Read more

போலி மருத்துவர்களை களையெடுக்க உத்தரவு !!

போலி மருத்துவர்களை களையெடுக்க உத்தரவு !!

போலி மருத்துவர்களை கண்டறிந்த காவல்துறையில் புகார் தெரிவிக்க அனைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களுக்கு இந்திய மருத்துவ இயக்குனர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அலோபதி மட்டுமன்றி சித்தா, யுனானி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் மருத்துவர்கள் தங்கள் பதிவு செய்த மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் போலி டாக்டர்களை கண்டறிந்து, … Read more

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :! முன் அனுபவம் தேவையில்லை !!

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :! முன் அனுபவம் தேவையில்லை !!

அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Device Associate என்ற காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக BE, B.Tech , Bsc,Msc, IT,ECE,EEE போதுமானது. மேலும் இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியுடையவர்கள் மற்றும் திறமை மிக்கவர்கள் இன்டர்வியூ (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு, நிறுவனம்          … Read more

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடக்கு சட்டீஸ்கர் ,ஒடிசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் ,அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நீலகிரியில் 11 சென்டி … Read more

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! திடுக்கிடும் சம்பவம்!

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! திடுக்கிடும் சம்பவம்!

சேலம் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ மிகவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ராஜாஜி ரோடு பகுதியில் லட்சுமி கிருபா அப்பார்ட்மென்ட் உள்ளது. இது ஒரு 4 மாடி கட்டிடம் ஆகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சண்முக சுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகசுந்தரம் ஜன்னல் மற்றும் கதவு மொத்த … Read more

கெத்தாக பாம்பு கறி சாப்பிட்ட இளைஞர்கள்! கொத்தாக அள்ளிய வனத்துறை !

கெத்தாக பாம்பு கறி சாப்பிட்ட இளைஞர்கள்! கொத்தாக அள்ளிய வனத்துறை !

நடிகர்களை போல தாமும் எப்படியாவது பிரபலமாக வேண்டும் எனும் இடத்தில் சில சாமானிய மக்கள் செய்யும் முட்டாள்தனமான காரியங்களில் சர்ச்சைகளில் முடிகிறது. அவ்வகையில் சிலர் வினோதமான செயல்களை செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னை பிரபலமாகி கொள்கின்றனர். ஆனால் அதுவே சிலருக்கு விபரீதமாக முடிகிறது. அவ்வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் மீன் சமைத்து சாப்பிடுவது போல் பாம்பை சமைத்து ஒருவர் சாப்பிட்டு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பாம்பை கண்டால் படையும் அஞ்சும் என்னும் … Read more

நயன்தாராவின் நீச்சலுடை குறித்து கேள்வி !தொகுப்பாளரின் மூக்கை உடைத்த அஜித் !

நயன்தாராவின் நீச்சலுடை குறித்து கேள்வி !தொகுப்பாளரின் மூக்கை உடைத்த அஜித் !

என்னதான் காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார். ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளமும் பெண்ணுக்கே உரிய கதாபாத்திரங்களிலும் நடித்து பெரிய வெற்றி பெற்றுள்ளார். இவர் முற்காலங்களில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமீபகாலத்தில் என்னுடைய காதலரான விக்னேஷ் சிவன் உடன் வெளிநாடுகள் சென்று புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக வெளியிட்டார். ஆனால் இவர் தற்பொழுது நடிக்கும் … Read more