கிறிஸ் எவர்ட்டின் சாதனையை முறியடித்த இந்த வீராங்கனை

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலாவது சுற்றில் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை விரட்டினார். அமெரிக்க ஓபன் வரலாற்றில் ஒற்றையரில் செரீனா பதிவு செய்த 102-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் அதிக வெற்றி பெற்றவரான கிறிஸ் எவர்ட்டின் (அமெரிக்கா) சாதனையை முறியடித்தார். இதே போல் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), சோபியா … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர்

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் பிரட்லி ஹெலனை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தி இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு சுமித் முன்னேறினார். மேலும் அமெரிக்க … Read more

தோல்வியே சந்திக்காத வீரர் தொடர்ச்சியாக இத்தனை வெற்றியா?

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) பந்தாடினார். இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக ருசித்த 24-வது வெற்றி இதுவாகும். ஜோகோவிச் அடுத்து கைல் எட்மன்டை (இங்கிலாந்து) சந்திக்கிறார். … Read more

ரசிகர்கள் இன்றி அரங்கேறிய அமெரிக்க ஓபன் டென்னிஸ்

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டி அரங்கேறியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2016-ம் ஆண்டு சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாதனையை சமன் செய்து விடுவாரா?

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலால் விம்பிள்டன் உள்பட பல தொடர் ரத்தான நிலையில் நடக்கும் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி இதுவாகும். சாப்பிடும் போது தவிர எப்போதும் முககவசம் அணிந்திருக்க வேண்டும், ஸ்டேடியம் பகுதியில் நுழையும் போது உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்புதல் இன்றி வெளியே சென்றால் போட்டியை விட்டு நீக்கப்படுவார்கள் உள்ளிட்ட கடும் பட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு … Read more

சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கனடாவை சேர்ந்த மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 1-6 என ராவ்னிக் கைப்பற்றினார். அதன்பின் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், ஜோகோவிச் 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.

காயத்தில் இருந்து மீண்ட முர்ரே

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் 31-ந்தேதி நியூயார்க் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் தகுதி சுற்று இன்றி இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, பெல்ஜியம் வீராங்கனை கிம் கிலிஸ்டர்ஸ் ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டு உள்ளது.  நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்பதற்கு வசதியாக முன்னாள் சாம்பியன்கள் முர்ரே நீண்டநாள் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். மூன்று குழந்தைகளின் தாயாரான 37 வயதான கிலிஸ்டர்ஸ் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு இந்த … Read more

ஆஷ்லி பார்ட்டி திடீர் விலகல்

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி ‘கிராண்ட்ஸ்லாம்’  என்ற அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் தொடங்குகிறது.  இந்த போட்டி  செப்டம்பர் 13-ந்தேதி முடிவடைகிறது.  கொரோனாவின் ருத்ரதாண்டவத்தால் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு எந்த  போட்டிகளும் நடக்கவில்லை. இதன் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தாலும், மறுபக்கம் அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் வீரர், வீராங்கனைகள் ஒருவித கவலையில்  உள்ளனர். ரசிகர்கள் இன்றி  இந்த போட்டி நடத்தப்படுகிறது.  இந்த நிலையில் ‘நம்பர் … Read more

மீண்டும் களம் திரும்புகிறார் சானியா…யாருடன் ஜோடி சேருகிறார் என தெரியுமா?

மீண்டும் களம் திரும்புகிறார் சானியா…யாருடன் ஜோடி சேருகிறார் என தெரியுமா? இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் ஆறுமுறை பட்டம் பெற்ற சாதனையாளர் ஆவார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்திவந்த வேலையில், தன் உடல் தகுதியை மேம்படுவதற்கான பயிற்சியிலும் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்டார். இந்த நிலையில் … Read more

55 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்,மீண்டும் தற்போதுதான்! என்ன செய்யும் இந்தியா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எந்த விளையாட்டு போட்டிகள் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 55 ஆண்டுகள் கழித்து இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஏ.ஐ.டி.ஏ உறுதிப்படுத்தியுள்ளது. இந்த டென்னிஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 14-15 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும். “ஆம், நாங்கள் செல்வோம்” என்று ஏஐடிஏ பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். இது, வெறும் டென்னிஸ் இருதரப்பு தொடர் மட்டும் … Read more