டிரம்ப் சர்ச்சை கருத்து

அமெரிக்க அதிபரான டிரம்ப் கமலா ஹாரிஸ்  பற்றி வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் கமலா ஹாரிசுக்கு இருக்கிறதா? என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியவில்லை என்று பதில் அளித்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறக்காதவராக இருந்தால், தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்றும் அப்போது கூறினார். அத்துடன், கமலா ஹாரிசை வேட்பாளராக தேர்வு செய்யும் முன்பு ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்து இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் … Read more

தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் – அமெரிக்க வெளியுறவுத்துறை

டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றதலிருந்து பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளார். அந்த வகையில் எச்1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது எச்1பி விசாவுக்கு அமெரிக்கா தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தாங்கள் பணியாற்றிய துறையில் மீண்டும் பணியாற்ற விரும்பினால் அவர்களுக்கு மட்டும் இந்த தளர்வு பொருந்தும். மேலும் அவர்கள் தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

மிகுந்த வேதனையை அளிக்கிறது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அனைத்து துறைகளும் பாதிக்கபட்டுள்ளன இந்த வைரஸ் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான்  50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிக்க தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து டிரம்ப் பேசும்போது கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களில் அமெரிக்காவில்தான் அதிகம் இது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று கூறினார்.

நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில்  கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து டிரம்ப் பேசும்போது உலகிலேயே அமெரிக்காவில்தான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் பரிசோதனை செய்வதிலும் நாங்கள் தான் முதலிடம் உள்ளோம் என்று கூறினார். மேலும் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவே பரிசோதனை செய்வதில் இரண்டாம் இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வாஷிங்டன்  தலைநகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனால் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பை ரகசியச் சேவைப் பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட விசாரணையில் வெள்ளை மாளிகைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றியுள்ளார். இதனை பார்த்த ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மீண்டும் சில நிமிடங்களில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசினார். அதில் சட்ட அமலாக்க … Read more

அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே அனுப்பபடலாம்

ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த போருக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தலிபான் பயங்கரவாதிகளிடம் அமெரிக்கா சிறப்பு  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த  சிறப்பு ஒப்பந்தத்தின் காரணமாக தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவின் தேச நாடுகளை தாக்காமல் இருப்பதற்காக அங்குள்ள அமெரிக்க இராணுவ வீரர்களை குறிபிட்ட எண்ணிக்கையில் திரும்ப அழைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யபட்டு வந்தன. இந்த சமயத்தில் வீரர்கள் முழுமையாகவே  அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாவாகவே அனுப்பபடலாம் என  தலிபான் பயங்கரவாத … Read more

45 நாளில் நடைமுறைக்கு வரும் – டிரம்ப்

டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை உறுதி செய்தது.இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது என்று கூறினார்.

அமெரிக்கா இரங்கல்

கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாகவும் 173 பேர்  படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விபத்து குறித்து மிகவும் வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் திணறும் அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் … Read more

கிராண்ட்ஸ்லாம் பரிசுத்தொகை குறைப்பு

அமெரிக்காவில் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி மொத்த பரிசுத்தொகை ரூ.400 கோடியாகும். இது 2019-ம் ஆண்டை விட ரூ.28 கோடி குறைவாகும். அதே சமயம் முதல் சுற்றில் வெற்றி பெறுவோருக்கு மட்டும் 5 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு ரூ.45 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. … Read more