டெல்லியிடம் விழுந்த மும்பை!

0
176

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் நேருக்கு நேர் சந்தித்தன. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் களம் இறங்கினார்கள். டிகாக் 2 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அரைசதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 44 ரன்களுக்கு தன்னுடைய ஆட்டத்தை இழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய இஷான்கிஷன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை அடுத்து 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்விஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர் ப்ரபத்விஷா 7 ரன்களில் ஆட்டமிழக்க ஷிகர் தவான் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்கள் எடுத்திருந்தார். ஆட்ட நேர இறுதியில் டெல்லி அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

Previous articleமுடிந்தது முதல் நாள் இரவு நேர ஊரடங்கு!
Next articleநான் சொன்னதை கேட்கலை! கடுகடுப்பில் துணை முதல்வர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here