இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும்!

0
105
#image_title

இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும்!

உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் இரும்பு சத்து நிறைந்த ஒன்று. இவை உடல் இயக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்.

பீட்ரூட்
பெரிய நெல்லிக்காய்
கேரட்
தக்காளி

சிறிய சைஸில் உள்ள பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு பெரு நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

இதனை தொடர்ந்து ஒரு கேரட்டை தோல் சீவிட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிறிய அளவு தக்காளியை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு]மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், பெரிய நெல்லிக்காய், கேரட், தக்காளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கவும். இந்த ஜூஸை ஒரு கிளாஸுக்கு ஊற்றி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இந்த ஜூஸில் சுவைக்காக சிறிது தூயத் தேன் கலந்து குடிக்கலாம்.