வாழ்நாள் முழுவதும் வாயுத் தொல்லை வராமல் இருக்க இந்த மூன்று பொருட்களை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்!!

Photo of author

By Divya

வாழ்நாள் முழுவதும் வாயுத் தொல்லை வராமல் இருக்க இந்த மூன்று பொருட்களை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்!!

நம்மில் பலர் வாயு தொல்லையால் சொல்லமுடியாத அளவிற்கு பெரும் அவதிப்பட்டு வருகிறோம்.இந்த வாயு பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு ஒருவரால் பொது வெளிகளில் நீண்ட நேரம் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு மன உளைச்சல்,மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எளிதில் தள்ளப்பட்டு விடுகிறார்.இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது மிகவும் அவசியம்.அதுவும் இயற்கை வழியில் தீர்வை தேடினால் மிகவும் சிறப்பு.

தேவையான பொருட்கள்:-

*சீரகம் – 3 தேக்கரண்டி

*ஓமம் – 3 தேக்கரண்டி

*கட்டி பெருங்காயம் – சிறு துண்டு

செய்முறை:-

ஸ்டவில் ஒரு கடாய் வைத்து அதில் 1 துண்டு கட்டி பெருங்காயம் போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.பின்னர் 3 தேக்கரண்டி சீரகம் மற்றும் 3 தேக்கரண்டி ஓமம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.

பின்னர் வறுத்த பொருட்களை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.இதை’
நன்கு பொடி செய்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

பின்னர் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு ஸ்டோர் பண்ணிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைத்து அந்த தண்ணீரை ஒரு டம்ளருக்கு மாற்றிக் கொண்டு தாயார் செய்து வைத்துள்ள பெருங்காயம்ம் + சீரகம் + ஓமப் பொடி 2 தேக்கரண்டி அளவு போட்டு நன்கு கலந்து பருகவும்.இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
இவ்வாறு தொடரந்து பருகுவதன் மூலம் வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.

அதேபோல் ஓமம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.பின்னர் 2 இலவங்கம்(கிராம்பு) எடுத்து உரலில் போட்டு தட்டி அதை அந்த தண்ணீரில் கலந்து பருகவும்.இவ்வாறு செய்வதன் மூலம் வாயுத் தொல்லை உடனடியாக சரியாகிவிடும்.