பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம் 

0
241
TTV Dhinakaran
TTV Dhinakaran

பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம்

தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ? இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ”நாங்கள் மட்டுமே உத்தமர்கள் என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திமுகவை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, ”பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ?

இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ”நாங்கள் மட்டுமே உத்தமர்கள்” என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஇனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு!
Next articleஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here