ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!

ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!

ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்! இந்த வினோதமான சம்பவம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தனது காலணியை வெளியே கழட்டி விடுவது வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஒரு சில வாரங்களாகவே அவர்களது காலணியை யாரோ திருடிச் சென்றதாக அனைவரும் திகைத்துப் போய் இருந்தனர். இதற்கிடையே அதே பகுதியில் வசிக்கும் Christian Meyer என்பவருடைய காலணி காணாமல் போயிருந்ததை அவர் கவனித்தார். இதுகுறித்து அவர் காலணிகள் காணாமல் … Read more

இன்று என்ன தினம் தெரியுமா?

tiger

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 ஆம் தேதி அன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். ராஜபாளையத்தை அடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமை இடமாக கொண்டு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் தற்போது புலிகளின் கணக்கெடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 ஆம் தேதி  இன்று புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும் நிலையில் இந்த சரணாலயத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் … Read more

பிரேசிலில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா

பிரேசிலில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா

பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவை அடுத்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது  அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பிரபல மருந்து நிறுவனங்களுடன் இங்கிலாந்து அரசு ஒப்பந்தம்

பிரபல மருந்து நிறுவனங்களுடன் இங்கிலாந்து அரசு ஒப்பந்தம்

பிரபல மருந்து நிறுவனங்களான ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவற்றுடன் 6 கோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் மறுசீரமைப்பு புரத அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசி ஒன்றை உருவாக்குகின்றன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு கோடை காலத்துக்குள் இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அங்கீகாரத்தை  பெற்று விடலாம் என இந்த மருந்து நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இவ்விரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது பற்றி இங்கிலாந்து வர்த்தக … Read more

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 196 பேர் பலி. இதனால் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 343 ஆக  அதிகரித்து வருகிறது.  இதுவரை 2.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

நேப்பாளத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பெய்த கன மழை காரணமாக நரஹரிநாத் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் இறந்துள்ளனர். 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 58 பேரைக் காணவில்லை என்றும் 87 பேர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் அங்கு வெள்ளத்திற்கும் நிலச்சரிவுக்கும் 160 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆங்காங்கு கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கடந்த ஏழு நாட்களில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை, ஏப்ரலுக்குப் பிறகு அதிகம் பதிவான எண்ணிக்கை என கருதப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் … Read more

கொரோனா உருவானது எப்படி?

கொரோனா உருவானது எப்படி?

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு, அவர்களின் கண்டுபிடிப்புகள் சார்ஸ் கோவ்-2 க்கு வழிவகுக்கும் வைரஸ் பல ஆண்டுகளாக வவ்வால்களில் கவனிக்கப்படாமல் பரவி வருகிறது என்பதைக் காட்டுவதாக கூறுகின்றன. இந்த ஆய்வில் பல குறிப்பிடத்தக்க தாக்கங்கள் உள்ளன என டுவிட்டரில் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர் லாரி காரெட் கூறியுள்ளார். சார்ச், கோவ்-2 எங்கிருந்து தோன்றிய என்பதை கண்டறிய உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு 3 … Read more

ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வருகை!

ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வருகை!

இந்தியாவில் விமானப்படையை பலபடுத்த ரஃபேல் போர் விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி 2016 ஆம் ஆண்டு 58000 கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா,பிரான்ஸ் நாட்டில் உள்ள ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்க கூடிய டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பயது ,இதில் பல்வேறு ஊழல்கள் நடைப்பெற்றுள்ளது,கொள்முதலில் வெளிப்படை தன்மையில்லை என பல்வேறு குற்றசாட்டுகளுடன் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கியது.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார் அதன்பின் இந்த வருடம் மே மாதத்தில் வழங்கபட இருந்த சில போர் விமானங்கள் கொரோனாவால் காலதாமதமானது.

இதனையடுத்து,நேற்று 5 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்ப பிரான்ஸ் முடிவு செய்தது. அதன்படி நேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து இருந்து இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் புறப்பட்டன.நேற்று இரவு இந்த போர் விமானங்கள் அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது.அதன் பின் இந்த போர் விமானங்கள் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்து இன்று இந்தியாவிற்கு வருகைதர உள்ளது.இதற்காக இந்தியாவில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள விமான தளத்தில் இந்த போர் விமானங்கள்
தரையிறங்குவதைக் கருத்தில் கொண்டு விமான தளத்தினை சுற்றி 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.மேலும் விமான தளத்தை சுற்றியுள்ள 4 கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விமானம் தரையிறங்கும் சமயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது என்று அம்பாலா போக்குவரத்து துறை டி.எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Read more

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 5,865 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 5,865 ஆக அதிகரிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைத் கடந்துள்ளது. தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 5,865 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது.