இந்தியாவில் தொடர்ந்து சரியும் நோய் தொற்று பாதிப்பு! பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!

0
147

நோய் தொற்றின் 3வது அலையை கட்டுப்படுத்தும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம்முடைய நாடு தினசரி நோய் தொற்று பாதிப்பு மருத்துவமனை சேர்க்கை, உள்ளிட்டவை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன் தினம் நாடு முழுவதும் 62,084 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்றையதினம் இந்த எண்ணிக்கை 58,077ஆக சரிந்துவிட்டது.

இந்த சூழ்நிலையில், இன்று புதிதாக 50,047 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விட 13 சதவீதம் குறைவானதாகும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,507 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக ஒட்டுமொத்தமான நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,25, 86,544 ஆக அதிகரித்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல நோய்த்தொற்று பாதிப்புக்கு ஒரேநாளில் 804 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதன் மூலமாக பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5.07,981 என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 1,36 962 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் குணமடைந்தவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,14,68,120 ஆக அதிகரித்திருக்கிறது. இதன் மூலமாக குணமடைந்தவரின் விகிதம் 97.37 சதவீதமாக இருக்கிறது.

அதோடு நோய்தொற்றுக்கு தற்சமயம் 6,10,443 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் இதுவரையில் 1,72,29,47,688பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

அதோடு இந்தியாவில் வயிற்றுப் பாதிப்பை கண்டறிவதற்கு நேற்று ஒரே நாளில் 14,50,532 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 74,93,20,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.