ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்!

0
176

என்னதான் சப்பாத்தி செய்தாலும் வடநாட்டவர்களைப் போல நன்கு புசு புசுனு மிருதுவாக வரவில்லையே என்று நாம் குழம்பி இருக்கலாம்.

இந்த ஒரே ஒரு பொருளை நீங்கள் கலந்து சப்பாத்தியை செய்தீர்கள் என்றால் சப்பாத்தி மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் நன்கு உப்பியும் வரும்.

அந்த பொருள் என்னவென்றால் உருளைக்கிழங்கு தான். ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்!

செய்முறை:

 

1. முதலில் ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு கொதிக்க வைக்கவும்.

2. எப்பவும் போல நாம் சப்பாத்திக்கு மாவு பிசைவோம் அல்லவா அதை போல் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொள்ளவும்.

3. பின் அந்த உருளைக்கிழங்கை சப்பாத்தி மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

4. பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். இதை நீங்கள் ஊற வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

5. இப்பொழுது அதனை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

6. ஒருமுறை வட்டமாக உருட்டிய பின் மறுபடியும் அதனை நான்காக மடித்து உருட்டினால் சப்பாத்தி வந்து லேயர் லேயராக வரும்.

7. அவ்வளவுதான் மிகவும் மிருதுவான சப்பாத்தி ரெடியாகி இருக்கும். இதற்கு எண்ணெய் சேர்க்க வேண்டும் என்று அவசியமே இல்லை

Previous articleஇந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?
Next articleஆசிய கோப்பை! இறுதிப் போட்டியின் நிலவரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here