ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய வீராங்கனை! உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பு!!

0
92

ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய வீராங்கனை! உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பு!!

 

ஒரே ஒரு தேசிய போட்டியில் விளையாடிய கால்பந்து ஆட்ட இளம் வீராங்கனை ஒருவர் 2023ம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான சுவிட்சர்லாந்து அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

 

சுவிட்சர்லாந்து நாட்டில் தொழில்முறை கால்பந்தாட்ட அணிகளுள் ஒன்றான யங் பாய்ஸ் அணிக்காக இளம் வீராங்கனை இமான் பெனி விளையாடி வருகிறார். இந்நிலையில் இமான் பெனி அவர்கள் தனது முதல் தேசிய போட்டியில் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி விளையாடினார்.

 

கடந்த ஜூன் 30ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஜாம்பியா அணிக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து அணி விளையாடியது. இந்த போட்டியில் இரண்டாவது பாதியில் மாற்று வீராங்கனையாக இமான் பெனி களமிறங்கினார். இந்த போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இமான் பெனி அவர்கள் FIFA மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான ஸ்விட்சர்லாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஒரே ஒரு தேசிய போட்டியில் விளையாடி உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற 16 வயதான வீராங்கனை இமான் பெனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் இன்கா கிரிங்ஸ் அவர்கள் “நிச்சியமாக இமான் பெனி அவர்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முத்திரை பதிப்பார் என்று தெரிவித்துள்ளார். மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான சுவிட்சர்லாந்து அணியில் 100க்கும் மேற்பட்ட தேசிய போட்டிகளில் விளையாடிய 5 வீராங்கனைகள் இடம்.பெற்றுள்ளனர்.

 

கடந்த 2015ம் ஆண்டு நடைநெற்ற FIFA மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சிவிட்சர்லாந்து மகளிர் கால்பந்து அணி பங்கேற்று ரவுண்ட் ஆப் 16 சுற்று வரை முன்னேறியது. 2015ம் ஆண்டுக்கு பிறகு 2023ம் ஆண்டு நடக்கவிருக்கும் மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக சுவிட்சர்லாந்து அணி பங்கேற்கவுள்ளது.

 

2023ம் ஆண்டுக்கான FIFA மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சுவிட்சர்லாந்து அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து மகளிர் கால்பந்து அணி தனது முதல் போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை வரும் ஜூலை 21ம் தெதி எதிர் கொள்கின்றது.

 

FIFA மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடர் வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 32 மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கின்றது.