நகர்ப்புற உள்ளாட்சி! தேர்தல் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு சென்னை மாநகராட்சி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

0
67

தமிழகத்தில் கடந்த 2019ஆம் வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, இந்த தேர்தலில் பல பகுதிகளில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சித் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் கூட ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆளும் தரப்புக்கு அதிர்ச்சியை வழங்கியது.

எனவே அந்த தேர்தலில் கிடைத்த வெற்றியை உத்வேகமாக கொண்டு சென்ற வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மிகத்தீவிரமாக பிரச்சாரத்தை செய்தது.

அதன் பலனாக சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 145 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது.

இந்த சூழ்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. அதனை நடத்த வேண்டுமென்று பலர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது இதனையடுத்து சென்னை மாநகராட்சியில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் ஓட்டு பதிவின் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி எடுத்துக்கொண்டால் 200 வார்டுகளில் 30,23,803 ஆண்கள் மற்றும் 30,93,355 பெண்கள் மற்றும் 1576 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக இருக்கிறார்கள்.

அந்தவிதத்தில் மொத்தமிருக்கின்ற 66,18 , 634 வாக்காளர்கள் வாக்களித்து சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஒன்றாக சேர்ந்து பட்டியலின பெண் கவுன்சிலர் ஒருவரை மேயராக தேர்ந்தெடுப்பார்கள்.

பெரும்பான்மையின் அடிப்படையில், துணைமேயர் மண்டல குழு தலைவர்கள் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்படயிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதத்தில் பள்ளி, கல்லூரிகள் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விழிப்புணர்வை உண்டாக்க மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக வாக்குப்பதிவு நாளில் மாநகராட்சியில் இருக்கின்ற அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு நோய்த்தொற்று பாதித்த நோயாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குப்பதிவுக்கு 1 மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. ஆகவே பொது மக்கள் எல்லோரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.