இங்கிலாந்திலிருந்து ஈரோடு திரும்பிய 16 பேர்:! புதிய வகை கொரோனாவால் மக்கள் பீதி!

0
69

இங்கிலாந்திலிருந்து ஈரோடு திரும்பிய 16 பேர்:! புதிய வகை கொரோனாவால் மக்கள் பீதி!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி உலக மக்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றது.
இந்நிலையில் தற்போது நோய்த் தொற்று பீதியிலிருந்து படிப்பாக வெளியே வந்த மக்களுக்கு மீண்டும் ஒரு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இங்கிலாந்தில் பரவிய புதிய வகை தொற்று.இந்த புதிய வகை வைரஸானது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸை விட வீரியம் மிக்கதாகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் பல உலக நாடுகள் இங்கிலாந்திற்காண விமான சேவையை முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது.இன்று முதல் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமான சேவையை இந்தியாவும் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய திரும்பிய நபர்களை கண்டறிந்து அவர்களை பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.மத்திய அரசின் உத்தரவின் பெயரில் தமிழக சுகாதாரத் துறையினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இங்கிலாந்திலிருந்து வந்த நபர்களை குறித்து கணக்கெடுக்கும் வேலை தீவிரமாகபட்டது.அந்த வகையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை சுகாதார துறையினர் கணக்கு எடுத்தனர்.

இந்தக் கணக்கெடுப்பில் 16 நபர்கள் இங்கிலாந்திலிருந்து பெங்களூர் விமான நிலையம் வந்து அடைந்ததாகவும் பின்னர் அங்கிருந்து ஈரோடு வந்ததாகவும் ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இங்கிலாந்தில் இருந்து வந்த 16 நபர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுதான் நாடு திரும்பியுள்ளதாகவும்,ஆனாலும் இங்கிலாந்தில் தற்போது புதிய வகை தொற்று பரவி வருவதால் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும்,சோதனையில் அவர்களுக்கு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களின் ரத்த மாதிரி புனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இங்கிலாந்திலிருந்து திரும்பிய 16 நபர்களும் அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Pavithra