இன்று 74 -வதுசுதந்திர தினத்தில் தமிழக முதல்வர்

0
63

இந்தியாவில் இன்று 74 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் செயலகம் கோட்டையில் இன்று காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை செயலாளர் சண்முகம் அவர்கள் இன்று வரவேற்கிறார்.இதனைத் தொடர்ந்து முப்படை தளபதிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை முதல்வருக்கு அறிமுகம் செய்துவைப்பார். இன்று சென்னையில் கோட்டை பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது.

தேசியக்கொடியை ஏற்றியபின் முப்படை ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்பு விருது வழங்கும் விழா நடந்தது .இவ்விழாவில் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, சிறந்த சேவைக்கான இளைஞர், இளம்பெண்களுக்கான விருது,சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது,திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட அமைப்பு, மாற்றுத் மருத்துவருக்கான விருது,முதல்வர் நல் ஆளுமை விருது, கூட்டுறவு சங்கங்களுக்கான விருதுகளை முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ,விழாக்களில் பங்கேற்க மாணவர்கள் ,விஐபிகள் ஆகியவர்களை அனுமதிக்கப்படவில்லை.

இதனையடுத்து 74 வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசு உள்துறை அமைச்சகம் தகவலின்படி பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமான இடங்களில் கேமராக்கள் வைத்தும், ட்ரோன் கேமரா மறக்க வைக்கும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து 13 கடலோர மாவட்டங்களில் காவல் ஆய்வாளர் காவல் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இரவு முழுவதும் புதுச்சேரி மாநிலத்திலும் சுதந்திர தினத்தை ஒட்டி அரசு அலுவலகங்கள் ,தலைவர்களின் சிலைகள் இரவு முழுவதும் மின் விளக்குகளால் கண்களை கவர்ந்தன .சுதந்திர தினத்தை ஒட்டி நாடெங்கும் ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் மற்றும் கடலோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K