ஈரோடு மாவட்டத்தில் வாலிபரின் தலைமீது ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
612
A motorcycle fell on the head of a teenager in Erode district! A lot of excitement in the area!
A motorcycle fell on the head of a teenager in Erode district! A lot of excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் வாலிபரின் தலைமீது ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பங்காளப்புதூர் அடுத்துள்ள கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஜேஜே நகரை சேர்ந்தவர் சதாமுருகன் (30). அவர் நேற்று இரவு அவரது மோட்டார் சைக்கிளில் சத்திய அந்தோணி சாலையில் சென்று கொண்டிருந்தார். மேலும் அவர் தண்ணீர் பந்தல் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அப்போது அந்த பகுதியில் திடீரென சின்னசாமி என்பவர் சைக்கிளில் சாலையை கடக்க முயற்சி செய்தார்.  எதிர்பாராத விதமாக சாதாமுருகன் சைக்கிளின் மீது மோதினார். அப்போது சதாம் முருகன் மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்தார். மேலும் அப்போது பின்னால் கிறிஸ்தோபர் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் சாலையில் விழுந்து கிடந்த சதாம் முருகனின் தலை மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி இறக்கினார்.

அதில் படுகாயம் அடைந்த சதா முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும் இந்த விபத்து குறித்து பங்காளபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவயிடத்திர்க்கு வந்த போலீசார் சதா முருகனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த விபத்தின் பேரில் வங்காள புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Previous articleதஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு! 
Next articleஅண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here