இந்த படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது! தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட அறிவிப்பு!
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பி.ஏ படிப்புக்கான சிறப்பு பிரிவு மற்றும் பொது பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் எந்த கல்லூரி என்று உறுதி செய்வதற்கான இணைய வழி கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அதனை அடுத்து கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வரையிலும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
இதனையடுத்து 431 பொருளியல் கல்லூரிகளில் பி.இ ,பி.டெக், பி.ஆர்க் போன்ற படிப்புகளில் இன்று முதல் இடங்களை பெறுபவர்கள் அடுத்த ஏழு நாட்களுக்கு கட்டணம் செலுத்தாவிட்டால் அந்த இடங்களும் மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பிரிவு பொதுப்பிரிவு கலந்தாய்வு இணையவளிலேயே நடைபெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளது. கிராமப்புற மாணவர்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவர்கள் சேர்க்கை பயணங்களுக்கு சென்று இந்த கலந்தாய்வில் அறிவித்துள்ளனர்.