Breaking News, Crime, District News

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

Photo of author

By Parthipan K

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

Parthipan K

Button

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்.இவருடைய மனைவி மணி என்ற சிறும்பாயி. இவர்களுடைய மகள் கிருஷ்ணவேணி. இவரை சிறும்பாயின் இரண்டாவது தம்பியான கோபால் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் மகள் மற்றும் மகன் உள்ளனர்.மேலும் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.அதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கிருஷ்ணவேணி தானியக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி அன்று கோபால் அய்யர் மலையில் உள்ள அவருடைய மனைவியை பார்க்க சென்றுள்ளார்.அங்கு கிருஷ்ணவேணியின் தாய் சிரும்பாயியை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.கோபால் அடித்ததில் கன்னத்தில் வீக்கம் ஏற்பட்ட சிரும்பாயி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இது குறித்து குளித்தலை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்… வைரல் புகைப்படம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… வைரலாகும் போஸ்டர்!

Leave a Comment