உடல் பருமன்? தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேற இதை இரவு 1 கிளாஸ் பருகுங்கள் போதும்!!

Photo of author

By Divya

உடல் பருமன்? தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேற இதை இரவு 1 கிளாஸ் பருகுங்கள் போதும்!!

Divya

உடல் பருமன்? தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேற இதை இரவு 1 கிளாஸ் பருகுங்கள் போதும்!!

உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் எளிதாக ஏற்பட்டு விடுகிறது. ஆரோக்கியமற்ற உணவு, தூக்கமின்மை, மன அழுத்தம், வாழ்க்கை முறை, அதிக உணவு உட்கொள்ளுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் பல்வேறு நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடுகிறது. இந்த உடல் பருமனால் நமது அழகும் சேர்த்து கெடுகிறது.

இதனை குறைக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்பட வில்லை என்பது தான் அனைவரின் கருத்து. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை பாலோ செய்தால் நிச்சயமாக உடலில் தேங்கி கடந்த கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*சுக்கு பொடி – 1/2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 சிட்டிகை அளவு

*எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.

பிறகு 1 தேக்கரண்டி என்ற அளவில் கருஞ்சீரகம் எடுத்து ஒரு உரலில் இடித்து சூடாகி வரும் தண்ணீரில் சேர்க்கவும்.

பின்னர் சிறு துண்டு சுக்கு சேர்த்து இடித்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதையும் கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியாக 1 சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து 2 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து இரவு தூங்குவதற்கு முன் பருக வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 1 மாதம் வரை எடுத்து வந்தோம் என்றால் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பு கரைந்து விடும். அதிக உடல் எடை கொண்டவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மற்றும் இரவு தூங்குவதற்கு முன் இந்த பானத்தை எடுத்து வருவது நல்லது.