தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

0
30
#image_title

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

நம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் சின்ன வெங்காயத்தில் ;தாது உப்புகள், வைட்டமின்கள், சல்பர், புரதம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இவை பெயருக்கு சின்ன வெங்காயம் என்று சொல்லப்பட்டாலும் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களோ அதிகம். தலை முதல் பாதம் அவரை அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இந்த சின்ன வெங்காயம் இருக்கிறது.

தினமும் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தோம் என்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சின்ன வெங்காயத்தை பச்சையாகவோ தேனில் ஊறவைத்தோ சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும்.

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் – தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 1 கப்

*தூயத் தேன் – தேவையான அளவு

*கண்ணாடி பாத்திரம் – 1

செய்முறை:-

முதலில் ஒரு கப் சின்ன வெங்காயம் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதை ஒரு காட்டன் துணி கொண்டு துடித்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டாம்.

பின்னர் ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி ஜார் எடுத்து அதில் சின்ன வெங்காயத்தை கீறல் போட்டு சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் சின்ன வெங்காயம் மூழ்கும் அளவிற்கு தேன் சேர்த்து கொள்ளவும். இதை மூடி போட்டு இரண்டு அல்லது 3 நாட்கள் வரை ஊற விட்டு பின்னர் சாப்பிடலாம்.

இவ்வாறு செய்து தினமும் சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*தினமும் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வலு கிடைக்கும். அதேபோல் நோய்களை எதிர்த்து போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

*சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சுப் பிடிப்பு உள்ளிட்ட தொந்தரவு இருப்பவர்கள் தேனில் ஊறவைத்த வெங்காயம் சாப்பிடலாம். இதனால் உரிய பலன் கிடைக்கும்.

*உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து இரத்தம் சம்மந்தபட்ட நோய் பாதிப்பு வராமல் இருக்க இந்த வெங்காயம் பெரிதும் உதவியாக இருக்கிறது.

*நம்மில் பலர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறோம். இதை குறைக்க முடியாமல் திணறி கொண்டிருப்பவர்களுக்கு தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம் சிறந்த தீர்வாக இருக்கும்.

*உரிய நேரத்தில் தூக்கம் இல்லை என்றால் நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். எனவே கவலையை மறந்து நிம்மதியாக தூங்க தினமும் தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிடுவது நல்லது.

*உடலில் செரிமான சக்தியை அதிகரிக்க இந்த வெங்காயத்தை சாப்பிடுவது நல்லது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து காணப்படுகிறது.

*பல் ஈறு வீக்கம், வலி உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளுக்கும் சின்ன வெங்காயம் அற்புத தீர்வாக இருக்கும்.