சாராய மாடல் ஆட்சிக்கு நாங்களெல்லாம் ஆதரவு.. மவுனம் காத்து உண்மையை உடைக்கும் திரை பிரபலங்கள்!!

சாராய மாடல் ஆட்சிக்கு நாங்களெல்லாம் ஆதரவு.. மவுனம் காத்து உண்மையை உடைக்கும் திரை பிரபலங்கள்!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண ஓலையானது தமிழகம் முழுவதும் கேட்டு வருகிறது.இது குறித்து பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் எப்பொழுதும் ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்து கருத்து தெரிவிக்கும் சில பிரபல நட்சத்திரங்கள் இந்த அசம்பாவிதம் குறித்து வாயவே திறக்கவில்லை.இதனை பல நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.இதில் முதலாவதாக இருப்பது கணவன் மற்றும் மனைவியான நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தான். குறிப்பாக சூர்யா ஜெய் பீம் படத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் எதிர்ப்பையே சம்பாதித்தார்.

சாராய மாடல் ஆட்சிக்கு நாங்களெல்லாம் ஆதரவு.. மவுனம் காத்து உண்மையை உடைக்கும் திரை பிரபலங்கள்!!
#image_title

மேற்கொண்டு இவர் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் அதிமுக பாஜக மற்றும் வலதுசாரியை எதிர்ப்பது போலவே இருக்கும்.அந்த வகையில் இவரது ஆதரவும் சாராய மாடல் ஆட்சிக்கு என்பதை சொல்லாமல் சொல்வது போல தான் காணப்படும்.இவருக்கு ஏற்றார் போல அவரது மனைவியும் ஒரு சதவீதம் கூட குறையாமல் நான் இடதுசாரி என்பதை வெளிப்படையாகவே இவரது பேச்சின் மூலம் நாம் அறியலாம்.இப்படிப்பட்ட நட்சத்திரங்கள் தான் இத்தனை மரணங்கள் நடந்தும் வாய் திறக்காமல் உள்ளது.

சாராய மாடல் ஆட்சிக்கு நாங்களெல்லாம் ஆதரவு.. மவுனம் காத்து உண்மையை உடைக்கும் திரை பிரபலங்கள்!!
#image_title

இவர்களின் வரிசையில் அடுத்தடுத்தாக பிரகாஷ்ராஜ், சத்யராஜ், சித்தார்த், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் உள்ளனர்.பிரகாஷ் ராஜ் ஆரம்பகட்டத்தில் இருந்து பாஜக-வை நேருக்கு நேராக எதிர்ப்பார்.ஒரு மேடை கிடைத்தாலும் அதை விட்டு வைப்பதில்லை.இவரைத்தொடர்ந்து சத்யராஜும் அவ்வழியே என்று கூறலாம். இவர் கலைஞர் காலத்திலிருந்து திமுக குடும்பத்திற்கே விசுவாசமாக இருந்து வருகிறார்.இவரைத் தொடர்ந்து இவரது மகளும் பெரியார் கொள்கையை கடைபிடிக்கும் ஒரு நபர்தான்.

சாராய மாடல் ஆட்சிக்கு நாங்களெல்லாம் ஆதரவு.. மவுனம் காத்து உண்மையை உடைக்கும் திரை பிரபலங்கள்!!
#image_title

இதே போல சித்தார்த், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் மேலிடத்தை நேருக்கு நேராகவே தாங்கள் எதிர்க்கிறோம் என்பதை பல மேடைகள் மற்றும் பல பதிவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.ஆனால் இப்படிப்பட்ட நட்சத்திரங்கள் இத்தனை மரண ஓலைகளை கேட்டும் அமைதி காப்பது எதனால் என்று கேள்வி எழுந்துள்ளது.இவர்கள் அனைவரும் சாராய மாடல் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதனால் வாய் பேச முடியாமல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று அதே சமயத்தில் அது அனைத்து இடங்களிலும் பேசப்பட வேண்டும்.தங்களின் வேண்டியவர்களின் ஆதரவை சம்பாதிக்க கருத்துகளை பேசக்கூடாது என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இந்த திரை பிரபலங்கள் பொம்மையாச்சிக்கு அஞ்சி இப்படி தங்கள் கருத்துக்களை கூறாமல் மௌனம் காத்து வருகிறார்களா என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.