மழை மற்றும் பனி காலங்களில் பாத வெடிப்பு,சேற்றுப்புண் ஏற்படுவது இயல்பான ஒன்று.இதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு,எரிச்சல் உண்டாகி அவதிக்கு ஆளாக நேரிடும்.இதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கீழ்கண்ட கை மருந்துகளை பயன்படுத்தவும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)மருதாணி இலை – 1/2 கப்
2)மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
3)வேப்ப இலை – 1/4 கப்
செய்முறை:-
நீங்கள் முதலில் மருதாணி இலைகளை பறித்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு 1/4 கப் அளவிற்கு வேப்ப இலைகளை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
இதை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை கிண்ணத்தில் போட்டு ஒரு ஸ்பூன் மஞ்சள் கலந்து கொள்ளவும்.
இந்த விழுதை இரவு நேரத்தில் கால்களில் பூசி மறுநாள் காலையில் வெது வெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்.இப்படி ஏழு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் பித்த வெடிப்பு,சேற்றுப்புண்,கால் ஆணி அனைத்தும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)கண்டங்கத்திரி – சிறிதளவு
செய்முறை:-
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் கண்டங்கத்திரி சிறிதளவு சேர்த்து சூடாக்கி கொள்ளவும்.இதை கால் பாதங்களில் பூசினால் வெடிப்பு,கால் ஆணி,சேற்றுப்புண் உள்ளிட்டவை குணமாகிவிடும்.
தேவையவான பொருட்கள்:-
1)மாமர பிசின் – சிறிதளவு
2)பால் – 20 மில்லி
செய்முறை:-
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் மாமர பிசின் தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு அவை மூழ்கும் வரை காய்ச்சாத பால் சேர்க்கவும்.
இதை நாள் முழுவதும் ஊறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்டாக்கி பித்த வெடிப்பு,சேற்றுப்புண் மீது பூசி வந்தால் அவை சீக்கிரம் சரியாகிவிடும்.