அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு!! நகரும் புயல் சின்னம்!!

0
129
Chance of rain for next 6 days!! Moving Storm Icon!!
Chance of rain for next 6 days!! Moving Storm Icon!!

பெஞ்சால் புயலைத் தொடர்ந்து புதிதாக புயல் சின்னம் ஒன்று வங்கக்கடலில் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அந்த புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு :-

மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது (டிசம்பர் 24) இன்று வட தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு இடையில் நிலவிக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கொண்டக்கடலில் உருவான இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வங்கக்கடலில் உருவான இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று திங்கட்கிழமை அன்று அதிகாலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது என்றும் இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள் :-

தமிழகத்தில் சென்னை மற்றும் வட தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த புயல் சின்னமானது தெற்கு நோக்கி நகா்ந்து வலுவிழந்து டிச. 26-இல் டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையேறி தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக் கடலில் சேர்ந்து விடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous article30 வருடங்களுக்கு பிறகு சர்வதேச திரைப்படங்களில் வெற்றி பெற்ற முதல் இந்திய திரைப்படம்!!
Next articleபிரதமரின் குவைத் பயணம்!! உண்மையை சொல்லும் அரபு ஊடகங்கள்!!