நாள்பட்ட நெஞ்சு சளியை இரண்டு நிமிடத்தில் கரைக்கும் மூலிகை மருந்து!! சூடாக்கி நெஞ்சில் தேய்த்தாலே சளி கரைஞ்சி வந்திடும்!

Photo of author

By Divya

நாள்பட்ட நெஞ்சு சளியை இரண்டு நிமிடத்தில் கரைக்கும் மூலிகை மருந்து!! சூடாக்கி நெஞ்சில் தேய்த்தாலே சளி கரைஞ்சி வந்திடும்!

Divya

நீண்ட தினங்களாக நெஞ்சு சளி பாதிப்பை அனுபவித்து வருபவர்கள் கெட்டி சளியை கரைத்து வெளியேற்ற கருநொச்சி தைலம்,கற்பூராதி தைலம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி
2)கரு நொச்சி
3)சுக்கு

செய்முறை விளக்கம்:-

துளசி மற்றும் கருநொச்சியை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு சுக்கை நெருப்பில் போட்டு வாட்டி எடுக்க வேண்டும்.இந்த சுக்கை கல்வத்தில் வைத்து பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த துளசி,நொச்சி இலை விழுதை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இடித்த சுக்குத் தூளை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த கலவையை லேசாக ஆறவைத்து மார்பு பகுதியில் அப்ளை செய்து சளி கரைந்து வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சூடம்
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பின்னர் ஒரு கற்பூரத்தை தூளாக்கி அதில் போட்டு சில நொடிகள் சூடாக்க வேண்டும்.பிறகு இதை லேசாக ஆறவைத்து மார்பு மீது தடவினால் சளி கரைந்து வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆடாதோடை
2)தேன்

செய்முறை விளக்கம்:-

ஒரு ஆடாதோடை இலையை ஆவியில் வேகவைத்து சாறு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து சாப்பிட்டால் நெஞ்சு சளி வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)திரிகடுகு சூரணம்(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி திரிகடுக சூரணம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பெருகினால் நெஞ்சு பகுதியில் உள்ள சளி கரைந்து வெளியேறும்.