கிட்னி பெய்லியர் ஆகாமல் இருக்க இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

Photo of author

By Divya

கிட்னி பெய்லியர் ஆகாமல் இருக்க இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

Divya

உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள சித்த மருத்துவத்தை பின்பற்றுங்கள்.

சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள்:-

1)உடல் சோர்வு
2)தூக்கமின்மை
3)வாந்தி உணர்வு
4)குமட்டல் பிரச்சனை
5)பசியிழப்பு
6)கணுக்கால் வீக்கம் ஏற்படுதல்
7)சுவாசிப்பதில் சிரமம்

சிறுநீரக செயலிழப்பிற்கான காரணங்கள்:-

1)உயர் இரத்த அழுத்தம்
2)சிறுநீரக கோளாறு
3)சர்க்கரை நோய்
4)சிறுநீரக கல்

சிறுநீரக செயலிழப்பை தடுக்கும் ஹோம் ரெமிடி:

தேவையான பொருட்கள்:-

1)மூக்கிரட்டை கீரை – ஒரு கைப்பிடி
2)நெருஞ்சில் – 50 கிராம்
3)தொட்டால் சிணுங்கி – 50 கிராம்
4)தண்ணீர் ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கைப்பிடி மூக்கிரட்டை கீரையை வெயிலில் காய வைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து 50 கிராம் அளவிற்கு நெருஞ்சில் பொடி நாட்டு மருந்து கடையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு 50 கிராம் தொட்டால் சிணுங்கி இலையை வெயிலில் காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4.இப்பொழுது அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மூக்கிரட்டை இலை பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5.பின்னர் அதில் நெருஞ்சில் பொடி கால் தேக்கரண்டி மற்றும் தொட்டால் சிணுங்கி இலை பொடி கால் தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

6.இந்த பானம் அரை கிளாஸ் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)சிறுகீரை வேர் – ஒரு கைப்பிடி
2)நெருஞ்சில் வேர் – ஒரு கைப்பிடி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கைப்பிடி சிறுகீரை வேர் மற்றும் ஒரு கைப்பிடி நெருஞ்சில் வேர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு இதை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் வெயிலில் நன்றாக காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் அரைத்த சிறுகீரை வேர் மற்றும் நெருஞ்சில் வேர் பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

4.இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் இருக்கும்.