Breaking News, Health Tips

தெரிஞ்சிக்கோங்க.. இது தெரிந்தால் இனி பாக்கட் பாலை கொதிக்க வச்சி குடிக்க மாட்டீங்க!!

Photo of author

By Divya

இன்று பெருமபாலானோர் பாக்கெட் பாலை பயன்படுத்தி வருகின்றனர்.நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பாக்கெட் பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது.நம் தமிழகத்தில் ஆவின் பால் பயன்பாடு இருக்கிறது.

பாக்கெட் பால் அல்லது கறந்த பால் எதுவாக இருந்தாலும் நாம் முதலில் செய்வது கொதிக்க வைத்து பயன்படுத்துவதுதான்.ஆனால் இந்த செயல்முறை தவறானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பாலை காய்ச்சிய பின்னர் பயன்படுத்துவதை நாம் காலம் காலமாக பின்பற்றி வருகின்றோம்.

ஆனால் அப்படி இருக்கையில் பாக்கெட் பாலை கொதிக்க வைக்காமல் குடித்தால் அதன் முழு சத்தையும் பெறமுடியுமாம்.பாலை கொதிக்க வைத்தால் அதன் முழு ஊட்டச்சத்தும் போய்விடும்.பாலில் கிருமிகள் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.இதன் காரணமாகத் தான் பாலை கொதிக்க வைத்து குடிக்கின்றோம்.பாலில் டீ,காபி போன்ற பானங்கள் செய்யப்படும் பொழுது கொதிக்க வைத்து பயன்படுத்துவது வழக்கம்.ஆனால் பால் குடிப்பவர்கள் அதை கொதிக்க வைக்காமல் பயன்படுத்தலாம்.

பாலை கொதிக்க வைக்கும் பொழுது அதன் முழு சத்தும் நீங்கிவிடும்.பெரும்பாலும் பாக்கெட் பால் சரியான முறையில் பதப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது.அப்படி இருக்கையில் அதை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.

பாலை கொதிக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

பாக்கெட் பாலை கொதிக்க வைக்கும் பொழுது அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக அழிந்துவிடும்.இது தவிர கொழுப்பு,புரதம் ஆகியவை சிதையக் கூடும்.பாலில் இருக்கின்ற லாக்டோஸ் க்ரீமி பதத்திற்கு மாறி இனிப்பு சுவையை அதிகப்படுத்திவிடும்.இப்படி கொதிக்க வைத்த பால் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.எனவே பதப்படுத்திய பாக்கட் பாலை மீண்டும் கொதிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது.

உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த 08 பிரச்சனைகளை சந்திப்பீங்க!!

தலைமுடி ஈரத்தால் சளி பிடிப்பது ஏன்? முடி வெட்டவில்லை என்றால் சளி பிடிக்குமா?