இந்த ஒரு இலை போதும்.. சரும மங்கு தேமல் 7 தினங்களில் மாயமாகிவிடும்!!

Photo of author

By Divya

இந்த ஒரு இலை போதும்.. சரும மங்கு தேமல் 7 தினங்களில் மாயமாகிவிடும்!!

Divya

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக குப்பைமேனி இலையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.தேமல்,மங்கு,வெண்புள்ளி,கரும்புள்ளி போன்ற பாதிப்புகள் குணமாக குப்பைமேனி இலையை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை – ஒரு கப் கப்
2)காஸ்டிக் சோடா – 50 கிராம்
3)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
4)சோப் பேஸ் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் நீங்கள் ஒரு கப் அளவிற்கு குப்பைமேனி இலை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.இந்த குப்பைமேனி இலை சாறை கிண்ணம் ஒன்றிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து கால் பாகம் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் காஸ்டிக் சோடா 50 கிராம் அளவிற்கு சேர்த்து சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் வைத்து டபுள் பாய்லிங் மெத்தடில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அரைத்த குப்பைமேனி சாறை அதில் ஊற்றி கலந்துவிட வேண்டும்.பின்னர் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணையை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

இதை சோப் பேஸில் ஊற்றி நிழல் பகுதியில் 8 முதல் 10 மணி நேரம் வரை வைக்க வேண்டும்.பின்னர் இந்த சோப்பை 30 நாட்கள் கழித்து பயன்படுத்த வேண்டும்.

இந்த குப்பைமேனி சோப்பை சருமத்தில் பயன்படுத்தி குளித்தால் தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.தேமல்,வெண்புள்ளி,படர்தாமரை பிரச்சனை இருப்பவர்கள் குப்பைமேனி சோப் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி இலை – ஒரு கைப்பிடி
2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
3)வேப்பிலை – கால் கைப்பிடி
4)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் குப்பைமேனி இலை மற்றும் வேப்பிலையை எடுத்து தண்ணீர் விட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து சருமம் முழுவதும் அப்ளை செய்து குளித்தால் தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.