இன்று குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருபவர்கள் ஏராளம்.செயற்கை கருத்தரித்தல் முறையை நாடாமல் இயற்கையான முறையில் கருத்தரிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள லேகியத்தை செய்து சாப்பிடுங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)20 கிராம் சுக்கு துண்டு
2)20 கிராம் திப்பிலி
3)20 கிராம் இலவங்கம்
4)20 கிராம் அதிமதுரம்
5)20 கிராம் வசம்பு
6)20 கிராம் வெண்காரம்
7)20 கிராம் கோஷ்டம்
8)20 கிராம் ஏலக்காய்
9)ஒரு கற்றாழை துண்டு
செய்முறை விளக்கம்:-
படி 01:
முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் கற்றாழையை தவிர்த்து மற்றவற்றை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
படி 02:
பின்னர் ஒரு கற்றாழை மடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழையை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
படி 03:
பிறகு இதை கிண்ணத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் மிக்சர் ஜாரில் இந்த கற்றாழை ஜெல்லை போட்டுக் கொள்ள வேண்டும்.
படி 04:
அடுத்து வாங்கி வந்த மூலிகை பொருட்களை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துக் நன்றாக அரைக்க வேண்டும்.பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் மாத்திரை போல் சாப்பிட வேண்டும்.
இப்படி தொடர்ந்து 48 தினங்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் தேங்கி கிடந்த கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.நீர்க்கட்டி,தைராய்டு பாதிப்பு உள்ள பெண்கள் இந்த மூலிகை மருந்தை தொடந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.கருத்தரித்தல் தாமதமாகி கொண்டிருக்கும் தம்பதியினர் இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.