கட்சியில் முக்கியத்துவம் இல்லை! புலம்பிய நயினார் – அண்ணாமலை காரணம்?

0
59

தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக தற்போது நயினார் நாகேந்திரன் பதவியில் உள்ளார். ஆனால் அதிமுகவின் கூட்டணிக்காக அண்ணாமலையை நீக்கிவிட்டு இவரை அமர்த்தியுள்ளனர். இதனால் பெரும்பான்மையான நிர்வாகிகளுக்கு இதில் திருப்தி இல்லை. நயினாருக்கு போஸ்டிங் கொடுக்கும்போதே பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. அதனை நாம் சமூக வலைத்தளம் வரை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் நயினாருக்கு கட்சிக்குள் மரியாதை கிடைப்பது சற்று சிரமம் தான். இது ரீதியான பேச்சுக்கள் கட்சிக்குள்ளேயே இருந்த நிலையில் தற்போது இதை அவரே வெளிப்படுத்தி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் பூத் வலிமைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பாஜக மாநில தலைவர், கட்டாயம் 2026 ஆம் ஆண்டு நாம் வெற்றி பெறுவது உறுதி. அதேபோல யாரும் எதிர்பாராத வண்ணம் முருகர் பக்தர் மாநாடு இருந்தது. தமிழகத்தில் தினம் தோறும் பாலியல் ரீதியான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் லாக்கப் மரணமும் அதிகரித்துள்ளது என்று பேசினார்.

இதனை பேசிவிட்டு தனது உட்கட்சி சார்ந்த புலம்பலையும் கொட்டி தீர்த்துள்ளார். கட்சி நிர்வாகிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டால் மரியாதை கொடுத்து வணக்கம் கூட சொல்வதில்லை. அதிலும் வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவர் என்னை தெரியவில்லை எனக் கூறிவிட்டார். அதேபோல கடலூரைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்ட போதும் அவரது அப்பா என்று என்னை நினைத்துக் கொண்டாரா என்னவோ தெரியவில்லை, ஒழுங்கா இருந்துக்கோ என கூறிவிட்டு செல்போனை வைத்து விட்டார்.

இந்நிலையில் நான் யாரையாவது தொடர்பு கொண்டு பேசினாலும் முதலில் வணக்கம் சொல்லிவிட்டு பேசுங்கள் என அறிவுரை கூறினார். இவரை கட்சியில் நிர்வாகிகள் மதிக்காததற்கு அண்ணாமலை தான் மிகப்பெரிய காரணம் என்று இதன் மூலமே தெரிகிறது.

Previous articleபாஜக கூட்டணியை உதறி தள்ளும் அதிமுக.. மீண்டும் தலைவராகப்போகும் அண்ணாமலை!!
Next articleபெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. வீடு தேடி வரும் ரூ 1000!! கட்டாயம் இதை மிஸ் பண்ணிடாதீங்க!!