4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்! சிலைக்கு பெயிண்ட் ஊற்றியவரை பிடிக்க தனிப்படை! பாலியல் குற்றவாளிக்கு..?

0
41
sexually assaulted a 4-year-old girl
sexually assaulted a 4-year-old girl

திருவள்ளூர் மாவட்டம் சாலையில் நடந்து சென்ற 4 வயது பிஞ்சு குழந்தையை ஒரு காமக்கொடூரன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அங்கிள் என்ன விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க, என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு அந்த பொண்ணு அழுதுருக்கு.

இதை எதையும் பொருட்படுத்தாத அந்த மிருகம் கத்தியை காட்டி அந்த சிறுமியை மிரட்டி சத்தம் போடாதே என்று சொல்லி பாலியல் வன்கொடுமைக்கு அந்த பிஞ்சுக்குழந்தையை ஆளாக்கி இருக்கிறான். பிள்ளையை அடிச்சு வாயெல்லாம் ரத்தம் வரவச்சு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் அந்த கொடூரன். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை அந்த கொடூரனை காவல்துறை கைது செய்யவில்லை.

ஆனால் சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய 77 வயதுமிக்க முதியவரை ஒரே நாளில் காவல் துறை கைது செய்துள்ளது. 77 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒரு மருத்துவர். அவர் பெயர் விஸ்வநாதன். காரில் சென்று கருணாநிதி சிலைக்கு கருப்பு பெயிண்ட் ஊற்றிவிட்டு சென்றிருக்கிறார். தனிப்படை போலீஸ் அதிகாரிகள் கார் என்னை வைத்து விஸ்வநாதனை ஒரே நாளில் மடக்கி பிடித்துள்ளனர்.

கருணாநிதி சிலைக்கு பெயிண்ட் ஊற்றிய முதியவரை தனிப்படை அமைத்து ஒரே நாளில் பிடிக்க தெரிந்த திமுக அரசுக்கு பிஞ்சு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கனை பிடிக்க தான் நேரம் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் திமுக அரசை மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Previous articleதந்தையின் அடையாளத்தால் அல்ல உழைப்பினால் வந்தவன் – ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி
Next articleஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்! கோபத்தில் பள்ளி பேருந்தை கொளுத்திய உறவினர்கள்!